Skip to main content

நெல்லிக்குப்பம் அருள்மிகு ஶ்ரீ செல்வவிநாயகர் ஆலயத்தில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்.!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெல்லிக்குப்பம் முதல்நிலை ஊராட்சியில் 06வதுவார்டு அருள்மிகு ஶ்ரீ செல்வவிநாயகர் தெருவில்  கடந்த சுமார் 50ஆண்டுகளுக்கு முன்னர் செல்வவிநாயகர் சிலையை இங்குள்ள பொதுமக்கள் வைத்து சிறியகூரை கோவில் வைத்துவழிப்பட்டுவந்தனத்கள் .காலப்போக்கில் இங்குள்ளவர்கள் இக்கோவிலினை புதியதாக கட்டி கும்பாபிஷேகம் செய்ய இந்தாண்டு கடந்த மார்ச் மாதம்முடிவு செய்து அதன்படி ஆலயத்தில் இருந்த செல்வவிநாயகருக்கு பாலாலயம் செய்து கோவில்கட்டு திருப்பணியினை துவங்கினார்கள். 

அதன்படி புதியதாக கருவறை ,விமான மண்டபம் , அர்த்தமண்டபம் ஆகியவைகள் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைப்பெற்று அனைத்து பணிகளும் நிறைவுற்ற நிலையில் இந்தமாதம் ஶ்ரீ செல்வவிநாயகர் ஆலயத்திற்கு அஷ்டபந்தபந்தன மஹாகும்பாபிஷேகம்   செய்யமுடிவுசெய்யப்பட்டு அதன்படி கடந்த திங்கள்கிழமையன்று கோபூஜை விநாயகர் பூஜையும் அன்று மாலை முதல் கால யாக பூஜை துவங்கி மறுநாள் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இரண்டாம் காலயாக பூஜையும் மாலை மூன்றாம் காலயாக பூஜையும் நடைப்பெற்று இன்று காலை சுமார் 07.15மணிக்கு நான்காம் காலயாக பூஜை துவங்கி ஸ்பர்சாஹீ தத்வார்ச்சனை , விஷேச த்ரவ்யாதி ஹோமமங்கள் நடைப்பெற்று காலை 09.15மணிக்குமங்கலவாத்தியத்துடன் கடம்புறப்பட்டு சரியாக 09.45மணிக்கு அருள்மிகு ஶ்ரீ செல்வவிநாயகர் ஆலய விமான மண்டபத்தில் கலசத்திற்கு கும்பாபிஷேகமமும்  அதனைத்தொடர்ந்து மூலவருக்கு மஹாகும்பாபிஷேகமும் அதனைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபதூபஆராதனைகள் நடைப்பெற்றன. பக்தர்கள் நடைப்பெற்ற அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகத்தை கண்டுகளித்து வரிசையில் நின்று விநாயகரை வழிப்பட்டு அன்னதானம் பெற்றுச்சென்றனர்கள் .இன்றிலிருந்து தொடர்ந்து 48நாட்களுக்கு மண்டலஅபிஷேகம் நடைபெறயுள்ளது. இந்நிகழ்ச்சியில் நெல்லிக்குப்பம் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர். என்.சி .பார்த்தசாரதி ,துணைத்தலைவர் வார்டு உறுப்பினர்கள் கிராம பெரியவர்கள் ,திருக்கோவிலுக்கு நன்கொடை வழங்கியவர்கள் பொதுமக்கள் என திரளாக கலந்துகொண்டனர்கள். அருள்மிகு ஶ்ரீ செல்வவிநாயகர் ஆலயத்தினை ஐயாசாமி குடும்பத்தினர்கள் தனியாக நிலம் வாங்கி அதன்மீது ஊர்கிராம பொதுமக்கள் ஒத்துழைப்பில் திருப்பணிகளை சிறப்பாக செய்துமுடித்தனர்கள். இவர்களுக்கு திருக்கோவில் மற்றும் ஊராட்சி கிராம பொதுமக்கள் சார்பில் கும்பமரியாதை அளித்து கெளரவிக்கப்பட்டது. இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் திருக்கோவில் சார்பில் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்கள்.


செய்தியாளர் மூர்த்தி 

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...