பெரியபாளையத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் காலி பணியிடங்களை நிரப்பக் கோரியும் சமூகதணிக்கையை தடைசெய்ய கோரி ஆர்ப்பாட்டம்.!
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் காலி பணியிடங்களை நிரப்பக் கோரியும் சமூக தணிக்கையை தடை செய்யக் கோரியும் மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவ வே.த. சிவலிங்கம் தலைமை தாங்கினார்.
ஒன்றிய துணை தலைவர்கள் ரவி, துரை, கொளரவ தலைவர் மாராமுத்து ஒன்றிய இணை செயலாளர் கல்பனா முன்னிலை வகித்தனர். எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் தினேஷ் குமார் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட தலைவர் E.சிவா கலந்து கொண்டு காலி பணியிடங்களை நிரப்பகோரியும் சமூகதணிக்கையை தடைசெய்ய வேண்டி கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனவுரையாற்றினார் கூட்டத்தின் முடிவில் அனைவருக்குக் ஒன்றிய பொருலாளர் காந்திமதி நன்றி தெரிவித்தார் இந்த ஆற்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்ண்டனர்.
செய்தியாளர் துரை பன்னீர் செல்வம்

Comments
Post a Comment