Skip to main content

மின்சாரக் கட்டண உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஜூலை 29-ல் ஆர்ப்பாட்டம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூர் தெற்கு மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் கட்சி அலுவலக கூட்டரங்கில் 24.7.24 அன்று மாலை 3 மணிக்கு மாவட்ட நிர்வாக குழு   உறுப்பினர் வெ.சேவையா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, துணைச் செயலாளர் கோ. சக்திவேல் ,   மாவட்ட பொருளாளர்   ஜி. பாஸ்கர், நிர்வாக குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் சி.சந்திரகுமார், ஆர். இராமச்சந்திரன், பா. பாலசுந்தரம், வீர மோகன், அ.கலியபெருமாள் ஜி.பாஸ்கர், தி. திருநாவுக்கரசு, சி.பக்கிரிசாமி,த.கண்ணகி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் ஏழை எளிய நடுத்தர மக்களை பாதிக்க கூடிய  மின்சார கட்டண உயர்வை உடனடியாக தமிழ்நாடு அரசு திரும்ப பெற வலியுறுத்தி  தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு ஜூலை 29 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும்,இந்திய மக் களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக தற்போதுள்ள சட்ட விதிப்படியான  உரிமைகளை பறிக்கின்ற  வகையில் பாராளுமன்றத்தில் விவாதிக்க வாய்ப்பளிக்காமல்  ஒன்றிய அரசு புதிய குற்றவியல் சட்டத்தை ஜூலை1 முதல் அமுல்படுத்தியுள்ளது. 

நாடு முழுதும் வழக்கறிஞர்கள் உறுதிமிக்க போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராட்டத்திற்கு ஜனநாயக சக்திகள் முற்போக்காளர்கள் ஆதரவு  தெரிவிப்பதோடு சட்டத்திற்கு எதிராக கண்டன குரல் எழுப்பி வருகின்றனர். எனவே ஒன்றிய அரசு புதிய குற்றவியல் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆகஸ்ட் 9ம் தேதி சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடத்தவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.


செய்தியாளர் வேங்கை குணா

Comments