Skip to main content

தஞ்சாவூர் அக்ரோ சிட்டி லயன்ஸ் சங்க, 14-ஆம் ஆண்டு பணியேற்பு விழா.!

தஞ்சாவூர் அக்ரோ சிட்டி லயன்ஸ் சங்க,. 14-ஆம் ஆண்டு பணியேற்பு விழா, தஞ்சை கோல்டன் ஜூப்ளி ஹாலில், 21.7.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை, 6:30- மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் அக்ரோ சிட்டி லயன்ஸ் சங்க தலைவர்,எஸ். சித்தார்த்தன் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட இரண்டாம். துணை ஆளுநர், விஜயலட்சுமி சண்முகவேல், புதிய நிர்வாகிகளை பணியில் அமர்த்தி அவர்களை வாழ்த்தி சிறப்புரை வழங்கினார். அவர் பேசுகையில்: புதிய பொறுப்பாளர்களாக பதவி ஏற்றுக்கொண்ட நீங்கள், லயன்ஸ் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் இச்சங்கம் முன்னோடி சங்கமாக விளங்க உங்களுடைய உடல் உழைப்பை பயன்படுத்தி இச்சங்கத்திற்கு புகழை சேர்க்க வேண்டும். லயன்ஸ் சங்க கூட்டத்திற்கு வரும் அனைவரும், லயன்ஸ் பேஜை அணிந்து வர வேண்டும். லயன்ஸ் சங்கத்தினுடைய நிகழ்ச்சிகளில் அணிவிப்பதை தவிர்த்து, இனி வரும் காலங்களில் அதற்கான தொகையினை சங்கத்திற்கு வழங்கினால், இது சங்கத்தின் வளர்ச்சிக்கு பேர் உதவியாக இருக்கும் என இதனைஒரு கோரிக்கையாக வைக்கின்றேன்.    என இவ்வாறு கூறினார். டாக்டர்.டி. ஸ்டாலின் புதிய உறுப்பினர்களை இணைத்து அவர்களை வாழ்த்தி, சிறப்புரை வழங்கினார். என். சண்முகவேல் சேவை திட்டங்களை வழங்கி பாராட்டுரையாற்றினார், சிறப்பு விருந்தினர்,கே. பிரேம், எ. கருணைக்கடல்  ஆகியோ சிறப்புரை ஆற்றினர். கே. ராஜ்குமார்,டி. ராஜ்குமார், நல்லாசிரியர்,ஆர்.செளரி,எம்.ஜே. முகமது இர்பான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மண்டல ஒருங்கிணைப்பாளர்களான: ஜே.இளங்கோவன், டி.எஸ்.சந்தோஷ்.கே.ஆர். பாண்டியன், கே. கலைச்செல்வன், கே. குட்டியப்பன், என். சுரேஷ்குமார், டாக்டர். எஸ்பி.கணபதி,எஸ். விஜயகுமார், எஸ்.  ரமேஷ்,கே. எழிலரசி ஆகியோர்களும் புதிய பொறுப்பாளர்களை வாழ்த்தினார்கள்.

2024-25-ஆம் ஆண்டிற்கான புதிய பொறுப்பாளர்கள்,எம்.  இராஜ்குமார், தலைமையில் பதவி ஏற்றுக்கொண்டனர். புதிய தலைவராக, எம். இராஜ்குமார், செயலாளர்,கே. சிறைச்செல்வன், பொருளாளர்,ஆர். குலோத்துங்கன், நிர்வாக அலுவலர், டாக்டர். இ. கார்த்திகேயன், உடனடி முன்னாள் தலைவர், எஸ். சித்தார்த்தன்,முதல் துணைத்தலைவர், டாக்டர். யூ.ஜோசப், இரண்டாம் துணைத் தலைவர்,வி. கவிக்குமார், சங்க நெறியாளர்,ஜே. இளங்கோவன் ஆகியோர்கள் பதவி. ஏற்று கொண்டனர். இயக்குனர்களாக:ஜே. இளங்கோவன், டாக்டர். யூ.ஜோசப், எஸ்.சித்தார்த்தன், டாக்டர். இ. கார்த்திகேயன், ஆகியோர்களும், ஒருங்கிணைப்பாளர்களாக: ஜோஸ்பைன் அனோசிட்டா, ஒருங்கிணைப்பாளர் கே. விக்னேஷ், ஒருங்கிணைப்பாளர் கே. இராஜசேகர், ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.எஸ்.சுதர்சன், தகவல் தொடர்பு(PRO) வி. தமிழ்ச்செல்வன், ஜே.வி. கீதா, அடக்குநர்,வி. ச லூமன் சங்கீத் ஆகியோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் அனைத்து சங்க நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் இச்சங்கத்தினுடைய இந்நாள், முன்னாள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள்,மற்றும் உறவினர்கள், நண்பர்கள் , திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். புதிய தலைவர், எம். இராஜ்குமார் அவர்கள் தன்னுடைய பிறந்தநாளில் பதவி ஏற்றுக் கொண்டிருப்பது, எல்லோருக்கும் கிடைக்கப் பெறாத  சிறப்பு என்று சொல்லப்பட வேண்டும். நீ ஒரே நேரத்தில் புதிய தலைவராக பணி ஏற்றுக்கொண்டும், தன்னுடைய பிறந்தநாளையும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இது எல்லோருக்கும் கிடைக்கப்பெறாத வாய்ப்பு என்றேச் சொல்லப்பட வேண்டும். நிகழ்ச்சி நிறைவாக அவருடைய பிறந்த நாளை, கேக் வெட்டி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.


செய்தியாளர் வேங்கை குணா

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...