தமிழகத்தில் மூன்று மாதங்களில் 131 கொலைகள்.! சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது.! - இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்
திருவள்ளூர் மாவட்டம் பெரிய மடியூர் அருள்மிகு சுயம்பு வேம்புஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் காரிய சித்தி விநாயகர் பிரதிஸ்டை விழாவில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அரசு பணத்தில் ஒரு கோவில்களில் கூட கும்பாபிஷேகம் இதுவரை நடக்கவில்லை என்றும் கோவில்களின் வருமானத்தை தான் அரசு எடுத்துக் கொள்கிறது என்றும் கள்ளச்சாராயம் உயிர் விபத்துக்களை தடுக்க கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும்.
கள் உணவின் ஒரு பகுதி என்றும் கர்நாடகா கேரளாவில் கள்ளு கடைகள் உள்ளது ஆனால் தமிழகத்தில் தான் தடை உள்ளது என்றும்கள்ளுக்கடைகளை திறக்க போராட்டம் விரைவில் வலுப்பெறும் என்றும் தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் 131 கொலைகள் நடைபெற்றுள்ளதாக தலைநகரமாக கொலை நகரமா என்று கூறும் அளவிற்கு உள்ளதாகவும் மத்திய அரசு தமிழகத்தில் சட்ட ஒழுங்கை நிலை நிறுத்த வேண்டும் எனவும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டுமெனவும் பெரியபாளையம் பவானி அம்மன் ஞாயிறு புஷ்ப ரதேஸ்வரர் கோவில்களில் அவசர கதியில் வருகிற 12-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுவதாகவும் பல்வேறு கட்டுமான பணிகள் முறையாக நடைபெறாமல் உள்ளதாகவும் புஷ்பரதீஸ்வரர் கோவிலில் 50 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்ட பணம் இந்து சமய அறநிலைத்துறையினர் முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
செய்தியாளர் ராதாகிருஷ்ணன்

Comments
Post a Comment