Skip to main content

கல்வி வள்ளல் காமராஜரின்,122-வது பிறந்தநாள் சிறப்பு கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.!

கல்வி வள்ளல் காமராஜரின்,122-வது பிறந்தநாள் சிறப்பு கூட்டம், தஞ்சாவூர் கீழ ராஜவீதியிலுள்ள,' பெரியார் இல்லத்தில்,15/7 /2024 அன்று மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு புதுக்குடி அரசு ஆதித்திராவிடர்நல உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர், செ.சந்திரசோதி தலைமை தாங்கினார்.மாவட்ட ப.க.தலைவர்,ச. அழகிரி வரவேற்புரையாற்றினார், திராவிடக் கழக காப்பாளர்,மு. அய்யனார், திராவிடர் கழக தஞ்சை மாவட்ட தலைவரும், வழக்கறிஞருமான,சி. அமர்சிங், இந்திய காங்கிரஸ் மாநில  பொதுக்குழு உறுப்பினர், வயலூர் இராமநாதன், இந்திய காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ், தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர், லட்சுமி நாராயணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய்த்துறை பா.பார்த்தசாரதி தொடக்க உரையாற்றினார், தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர்,பி.ஜி. இராஜேந்திரன்  பட்டறிவின் மாமேதை காமராஜர் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்,மாநில அமைப்பாளர் ப.க. கோபு. பழனிவேல், மாவட்ட செயலாளர் பாவலர் பொன்னரசு, மாவட்ட அமைப்பாளர்   கௌதமன்  ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பகுத்தறிவாளர் கழகம் செய்து இருந்தது. நிகழ்ச்சியின் நிறைவாக மாநகர விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் எ.வி.என். குணசேகரன் நன்றி கூறினார். இதில் கலந்துகொண்ட அனைவரும்  காமராஜரின் புகழைப் பற்றி எடுத்துரைத்தார்கள். ஒவ்வொருவரும் பேசும் போது நான் இந்த அளவிற்கு உயர்ந்திருப்பதற்கு காரணம் ஐயா காமராஜர் அவர்களே. அவர் போட்ட பிச்சை தான் இன்று நான் வளர்ந்துள்ளேன் எனவும் கூறினர்.ராஜாஜி முதல்வராக இருக்கும்போது, 6000 பள்ளிகள் மட்டுமே இருந்ததாகவும், காமராஜர் முதல்வராக ஆன பிறகு,24,600- பள்ளிகளை உருவாக்கி உள்ளார்.  

இதனால் அனைவருக்கும் கல்வி கொடுக்கப்பட்டது. பள்ளிகளில் படிக்கும்ஏழை மாணவர்களுக்கு,  மதிய உணவு தந்த மாமேதை காமராஜர் அவர்களே குலக்கல்வியை அறவே ஒழித்தவர். இதற்கெல்லாம்  ஆணிவேராக திகழ்ந்தவர் தந்தை பெரியார் தான்,  தமிழகத்தின் முதல்வர், ,மு. க. ஸ்டாலின் அவர்களும், நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக இருந்து, நாடாளுமன்றத்தையே, நடுநடுங்க வைக்கும்  ராகுல் காந்தி அவர்களும், தந்தை பெரியாரின் பேரக்குழந்தைகள் என்று தான் சொல்லப்பட வேண்டும். அவர் வழியில் பெரியார் கண்ட கனவுகளைஎல்லாம்   தந்தை பெரியாரின் பேரனாக ராகுல் காந்தியும், மு க ஸ்டாலின் அவர்களும் திகழ்கின்றார்கள். காமராஜர் ஆற்றியபணிகளை எப்பொழுதும் நாம் நினைவு படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையாயின் மறந்திடுவோம். இன்று இருக்கக்கூடியவர்களுக்கு காமராஜர் தான் வழிகாட்டி. இவ்வாறு அவருடைய பெருமைகளை எடுத்துரைத்தார்கள்.


செய்தியாளர் வேங்கை குணா

Comments