ஊத்துக்கோட்டையில் வியாபாரிகள் சங்கம் மற்றும் லைன்ஸ்கிளப் நாடார் பிரமுகர்கள் சார்பில் காமராஜரின் 122வது பிறந்த நாள் விழா.!
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வியாபாரிகள் சங்கம் மற்றும் ஊத்துக்கோட்டையில் வாழ்கின்ற நாடார் மூத்த பிரமுகர்கள் மற்றும் LINOS கிளப் சார்பில் காமராஜரின் 122பிறந்த நாளை முன்னிட்டு காமராஜர் திருவுரு சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி தாய் தகப்பனை இழந்த ஏழை மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் பள்ளிபை வழங்கி கொண்டாடினார்கள்.
இந்நிகழ்வில் ஊத்துக்கோட்டை பேரூர் தலைவர் A.அப்துல் ரஷீத் நாடார் சங்க முன்னாள் தலைவர் M.செல்வ குமார், S.செல்வ விநாயகம் , R.பகவதி பாண்டியன், M.மணிகண்டன்முத்து, J.சீனிவாசன், லைன்ஸ் துளசிராமன், லைன்ஸ் நடராஜன், தலைமை ஆசிரியர் கதிரவன், லயன்ஸ் பாஸ்கரன், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் துரைபன்னீர் செல்வம்

Comments
Post a Comment