கர்மவீரர் காமராஜர் அவர்களின்,122-ஆம் ஆண்டு பிறந்த நாளில்,தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில், 15-இடங்களில் கொடியேற்றப்பட்டது. கொடியேற்று விழா நிகழ்ச்சிக்கு தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி. இராஜேந்திரன் தலைமையேற்று, மருத்துவக் கல்லூரி முதல் வாசல், நடராஜபுரம்காலனி, கோ ஆப்பரேட்டிவ் காலனி, ராணிப்பேரேடெக்ஸ் அருகில், குந்தவை நாச்சியார் கல்லூரி அருகில், குழந்தை இயேசு கோயில் அருகில், ஆர்.ஆர். நகர், மானம்பு சாவடி, கரந்தை, கீழவாசல் காமராஜர் சிலை அருகில், உள்ளிட்ட பகுதிகளில் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின்பாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாநகர மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் லட்சுமி நாராயணன், இந்திய காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் வயலூர் இராமநாதன், பொதுச் செயலாளர் செந்தில் சிவகுமார், பொருளாளர் பழனியப்பன், முன்னாள் கவுன்சிலர் சாந்தா ராமதாஸ், நீலகிரி வட்டார செயலாளர் செல்வ சுப்ரமணியன், மற்றும் பல கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment