உடையார்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காமராஜரின் 122 வது பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.!
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்வர் காமராஜரின் 122 வது பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக செங்காந்தள் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் இல.தமிழ்ச்செல்வன் பள்ளி மாணவர்களுக்கு காமராஜரை பற்றி பல்வேறு கருத்துக்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.முதுகலை ஆசிரியர் சுரேஷ் குமார் வரவேற்றார்.காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.மேலும் இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ரெங்கநாதன்,காளைமேகம் உள்ளிட்ட இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் ஆசிரியர் அருள் நன்றி கூறினார்.
செய்தியாளர் பாலு

Comments
Post a Comment