திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் வட்டார நாடார் ஐக்கிய சங்கத்தின் சார்பில் கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது முன்னதாக காலை 9.30 மணி அளவில் காமராஜர் திருமண மண்டபத்தில் இருந்து புறப்பட்டு அண்ணா பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி அறுசுவை உணவும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
மாலை 4:00 மணியளவில் ஊத்துக்கோட்டை நாடார் ஐக்கிய சங்கத்தின் தலைவரும் சமூக சேவகருமான C.பரமசிவம் செயலாளர் T.தங்ககுமார் பொருளாளர் M.பூபாலன் தலைமையில் அரசினர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி பெண்கள் மேல் நிலைப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியான கோதண்டராமன் உயர்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 10 மாணவ மாணவிகளுக்கு அவர்கள் கல்வித்தரத்தை ஊக்கவிக்கும் வண்ணமாக முதல் பரிசு ரூபாய் 5000மும் இரண்டாம் பரிசு ரூபாய் 3000மும் மூன்றாம் பரிசாக தல இரு நபர்களுக்கு 2000 மும் நினைவு கேடயம்வழங்கி பாராட்டி வாழ்த்தினார்கள்இந் நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஊத்துக்கோட்டை நாடார் ஐக்கிய சங்கத்தை சேர்ந்த மூத்த முன்னோடிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் துரைபன்னீர் செல்வம்

Comments
Post a Comment