தஞ்சையில் அருணகிரிநாதர் இசைச் சங்கம் சார்பில் தவில் வித்வான் கலைமாமணி கரந்தை சண்முகம் பிள்ளை,104-வது பிறந்தநாள் இசைவிழா.!
அருணகிரிநாதர் இசைச் சங்கம் சார்பில் தவில் வித்வான் கலைமாமணி சண்முகம் பிள்ளை 104-வது பிறந்தநாள் இசை விழா தஞ்சையில் நடைபெற்றது.தஞ்சை பெத்தண்ணன் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திருவையாறு அரசர் கல்லூரி முன்னாள் முதல்வர் சண்முக செல்வகணபதி வரவேற்றார். தமிழ்ப் பல்கலைக்கழக இசைத்துறை முனைவர் கற்பகம் இசை விழா அறிமுக உரையாற்றினார்.
அரண்மனை தேவஸ்தானம் மூத்த இளவரசர் பாபாஜி ராஜாபான்ஸ்லே மற்றும் தமிழ் மேதை குரு தியாகராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினார். மூத்த நாதஸ்வர தவில் மற்றும் சாக்ஸ்போ கலைஞர்களான பாலகிருஷ்ணன், தியாகராஜன், குஞ்சிதபாதம் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். மற்றும் சிறப்புமிகு சாதனையாளர்கள் கோவிந்தராஜன், கற்பகம், இராதாகிருஷ்ணன் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக மாநகராட்சி மேயர் சண். இராமநாதன் நன்றி கூறினார். முன்னதாக மங்கல இசை, சிறப்பு நாதஸ்வர தவில் இசை ஆகியவை நடைப்பெற்றன.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment