Skip to main content

புதுப்பாக்கம் மின்அழுத்த குறைபாட்டினை போக்கும் வகையில் 100கேவிதிறன் கொண்ட புதியமின்மாற்றியை அமைத்து கொடுத்த ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஆறுமுகத்திற்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள் !

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுப்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் உள்ள 08வது வார்டு கவரைத்தெரு அருகே புதுப்பாக்கம் பிரதானசாலையையொட்டி 100கேவி திறன் கொண்ட புதியமின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது .இந்நிகழ்ச்சிக்கு புதுப்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் லலிதாகிரிபாபு முன்னிலை வகித்தார் . மாம்பாக்கம் துணைமின்நிலைய ஆக்கமுகவர் அனைவரையும் வரவேற்றார் . சிறப்பு அழைப்பாளராக புதுப்பாக்கம் முதல்நிலை ஊராட்சி மன்றத்தலைவரும் திமுக கட்சியைச்சேர்ந்தவான புதுப்பாக்கம் எம்.ஆறுமுகம் கலந்துகொண்டு புதியமின்மாற்றியின் செயல்பாட்டினை துவங்கிவைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார். 

இந்நிகழ்வில் செங்கல்பட்டு மின்வாரிய தலைமை பொறியாளர் அருணாச்சலம் , மறைமலைநகர் செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம்  புதுப்பாக்கம் ,சிறுசேரி ஒன்றியக்குழு உறுப்பினர் ஆதிலட்சுமிகண்ணபிரான் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் , பொதுமக்கள் மின்சாரவாரிய ஊழியர்கள் எனதிரளாக கலந்துகொண்டனர்கள். இதுகுறித்து துணைத்தலைவர் லலிதாகிரிபாபு கூறுகையில் எனது இந்த 08வதுவார்டில் உள்ள கன்னியம்மன் கோவில் தெரு , காமராஜர் தெரு ,கவரைத்தெரு உள்ளிட்டபகுதிகளுக்கு கடந்த பத்துஆண்டுகளாக ஓரேஓருடிரான்ஸ்பார்மர் மட்டும் உபயோகத்தில் இருந்துவந்ததால் இந்தபகுதிகளில் அடிக்கடி குறைந்தமின்அழுத்தம் ஏற்பட்டுவந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுவந்தனர்கள். இதனை எங்கள் தலைவரிடம் நான் சென்று  புதியமின்டிாரன்ஸ்பார்மர் தனியாக அமைக்கவேண்டும் என்று இப்பகுதி மக்கள் சார்பில்  கோரிக்கைவைத்தேன் அதனடிப்படையில் அதற்கான வேலைகள் நடைப்பெற்று புதியடிரான்ஸ்பார் அமைக்கப்பட்டு இன்று பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதன்மூலம் நீண்டஆண்டுகால பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே உடனடியாக செயல்படுத்திய தலைவர் அவர்களுக்கும் உறுதுணையாக இருந்த மின்சாரநிர்வாகத்திற்கும் எங்கள் வார்டு பொதுமக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஊராட்சி மன்றம் சார்பில் தலைவர் எம்.ஆறுமுகம் அனைவரையும் ஒருங்கிணைத்து செய்திருந்தார் .


செய்தியாளர் மூர்த்தி 

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...