Skip to main content

கோவில்பட்டி தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க அமைச்சர் கீதாஜீவனிடம் கோாிக்கை மனு.!

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவனிடம் போல்பேட்டை அலுவலகத்தில் கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க நிா்வாகிகள் சந்தித்து கோாிக்கை மனு அளித்தனர். தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலை பார்க்கும் 4 லட்சம் தொழிலாளர்கள் தடை செய்யப்பட்ட சீனா பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களால் தீப்பெட்டி விற்பனை சரிந்து, பண்டல்கள் குடோன்களில் தேங்கி, தொழிலாளர்களுக்கு வாரத்துக்கு 2 நாள் முதல் 4 நாள் வரை மட்டுமே வேலை என்று அபாய கட்டத்துக்கு சென்றுவிட்டது. தமிழகத்தில் துாத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்கள், வேலுார் மாவட்டம் குடியாத்தம், தர்மபுரி மாவட்டம் காவேரிபட்டிணம் ஆகிய பகுதிகளில் உள்ள 5 லட்சம் தொழிலாளர்களுக்கு தீப்பெட்டி தொழில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது.தீப்பெட்டி தொழில் 1923ம் ஆண்டு முதல் தொடர்ந்து வரும் நிலையில், 100 ஆண்டுகளை கடந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகள் இந்தியாவில் 80 சதவீதம் சந்தையையும், பன்னாட்டு சந்தையில் 40 சதவீதத்தையும் பூர்த்தி செய்கிறது. ஆண்டுக்கு ரூ. 600 கோடி அன்னிய செலவாணியையும் நாட்டுக்கு ஈட்டித் தந்து கொண்டிருக்கிறது. இப்படி பாரம்பரியமான தீப்பெட்டி தொழிலுக்கு சீனாவிலிருந்து வரும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களால் விற்பனை பாதித்து, தொழில் நலிவடைந்து வருகிறது.


  இது தீப்பெட்டி உற்பத்தியாளர்களையும், தொழிலாளர்களையும் பாதிக்கத் துவங்கிவிட்டது. தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 3 ஷிப்ட் வேலை என்பது ஒரு ஷிப்ட்டாக மாறிவிட்டது. இப்போது, தீப்பெட்டி பண்டல்கள் தேக்கமடைவது அதிகரித்துவிட்டது. ஜி.எஸ்.டி வரி, டோல்கேட் கட்டண உயர்வு, லாரி கட்டணம் உயர்வு, தொழிலாளர்கள் சம்பள உயர்வு, மூலப்பொருட்கள் விலை உயர்வு என்று ஏகத்துக்கும் எல்லா பகுதிகளிலும் விலை உயர்ந்து விட்டது. இப்படி தீப்பெட்டி தொழில் செய்ய முடியாத நிலைக்கு காரணம் ரூ.20க்கு கீழ் விற்பனை செய்யப்படும் சீனா பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை தடை செய்யவேண்டும் என்று தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தனர். 

தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பார்வையிட்ட போது, சீனா சிகரெட் லைட்டர்களுக்கு தடை விதிக்க மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில், ரூ. 20க்கு கீழ் சீனா சிகரெட் லைட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், தடையை தாண்டி இப்போது, சீனா சிகரெட் லைட்டர்கள் நோபாளம் வழியாக கடத்தி வரப்பட்டு, முன்பை விட ரூ. 10க்கு கீழ் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், தீப்பெட்டி விற்பனை அடியோடு பாதிப்புக்குள்ளாகிவிட்டது. இப்போது வாரத்தில் ஒரு ஷிப்ட் வேலை பார்த்து வந்த தொழிலாளர்களுக்கு 2 நாள் முதல் 4 நாள் வரை மட்டுமே வேலை கிடைக்கிறது. அதுவும், கோயில் திருவிழா, கல்யாண வீடு என்று தொழிற்சாலைகளுக்கு லீவு விடுவதற்கு உற்பத்தியாளர்கள் காரணம் தேடு நிலைக்கு உள்ளாகி விட்டனர். அதுபோல், 40 குச்சிகள் கொண்ட தீப்பெட்டி ஒரு ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இப்போது, 2 குச்சிகளாக குறைத்து ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 90 சதவீதம் பெண் தொழிலாளர்களைக் கொண்ட தீப்பெட்டி தொழில் அவர்களை கைவிட்டு வருகிறது. தொழிலாளர்கள் மாற்று தொழிலை தேட துவங்கிவிட்டனர். இப்போது, லட்சத்தீவில் ரூ. 20க்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல், தமிழகத்திலும் தடை விதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் பரமசிவம் தலைமையில், செயலாளர் சேதுரத்தினம், சங்க நிர்வாகிகள் எத்திராஜ், ராஜராஜன், தொழிலதிபர் திலகரத்தினம், மாவட்ட திமுக பிரதிநிதி மாாிச்சாமி, உள்ளிட்டோர் அமைச்சர் கீதாஜீவனை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் உடனிருந்தார். 

    அப்போது, சட்டசபை கூடும் நேரத்தில், முதல்வர் ஸ்டாலினை தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் நேரில் சந்திக்க ஏற்பாடு செய்து தரவேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவனிடம் வலியுறுத்தினர். துாத்துக்குடி மாவட்ட தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் அமைச்சர் கீதாஜீவன், ‘கிராமப்புற தொழில்துறை அமைச்சர் அன்பரசன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அரசு செயலர்களை சந்திக்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.



செய்தியாளர் அ .ரவி

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...