பழவேற்காட்டில்அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை நிர்வாகத்தினை கண்டித்து புரட்சி பாரதம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.!
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையை பயன்படுத்தி வரும் நிலையில் இங்கு24 மணி நேரமும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணிக்கு இல்லாததால் தொடர்ந்து நோயாளிகள் பாதிக்கப்படுவதாகவும் விபத்து நேரங்களில் போதிய சிகிச்சை பெற முடியாமல் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் இதுகுறித்து பலமுறை சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு முறையிட்டும் போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் புரட்சி பாரதம் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ராஜா தலைமையில் சுகாதாரத்துறை மற்றும் அரசு மருத்துவமனை நிர்வாகத்தினை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் .அரசு தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர் .
செய்தியாளர் ராதா கிருஷ்ணன்

Comments
Post a Comment