தனியார் வங்கிகள் குண்டர்களை வைத்து மிரட்டுவதை தடுத்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.!
தமிழரின் தலைமை விவசாயிகள் சங்க நிறுவனரும்,தலைவருமான அருணா அஜீஸ், ஒரத்தநாடு காவல் ஆய்வாளர் அவர்களிடம் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ஒரத்தநாடு வட்டம், பாச்சூரை சேர்ந்த, விமல் ராஜ் என்பவர் எங்களது சங்கத்தை அணுகி, தஞ்சாவூரில் உள்ள இன்டசன் வங்கியின் குண்டர்கள்,தொலைபேசி மூலமாக அவதூராக பேசுவதும், நேரில் சென்று மிரட்டுவதும் தொடர் நிலையாக இருந்து வருகின்றது. இது போன்ற அச்சுறுத்தலின் காரணமாக என் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்து விடலாம் என்ற அச்சத்தில் உள்ள நிலையில், விமல் ராஜ் அவர்களுக்குஒரத்தநாடு காவல்துறை பாதுகாப்பு வழங்குமாறு தமிழரின் தலைமை விவசாயிகள் சங்க தலைவர் என்ற முறையில், இந்த மனுவை தங்களுக்கு பணிந்து சமர்ப்பிக்கின்றேன்.
ஆகவே ஐயா அவர்கள் இந்த மனதின் மீது தகுந்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, மீண்டும், மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன் என இணையதளம் மூலம் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.செய்தியாளர் வேங்கை குணா


Comments
Post a Comment