தூத்துக்குடி நகர உட்கோட்டம் மற்றும் ஆயுதப்படை போலீசாரின் உடற்பயிற்சி இன்று (15.06.2024) காலை தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய வளாக மைதானத்தில் நடைபெற்றது. மேற்படி போலீசாரின் உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து, காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகள் குறித்தும் மற்றும் காவல்துறையினர் தங்கள் உடல் நலத்தை பேணிக்காத்து உடலையும் மனதையும் நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தகுந்த அறிவுரைகள் வழங்கினார். பின்னர் போலீசாரின் குறைகளை கேட்டறிந்து அதற்கு நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது தூத்துக்குடி நகர கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திரு. கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா இ.கா.ப அவர்கள், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் (பொறுப்பு) திரு. பேச்சிமுத்து உட்பட சார்பு ஆய்வாளர்கள், ஆயுதப்படை போலீசார் மற்றும் தூத்துக்குடி நகர உட்கோட்ட போலீசார் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர் அ. ரவி.

Comments
Post a Comment