தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், தஞ்சை மாநகரக் கிளை ஒருங்கிணைப்பில் தஞ்சை வை விநாயகம் அவர்களின் "கொட்டித் தீர்த்து விடு" கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா, தஞ்சை பெசன்ட் அரங்கில், (16.06.2024) அன்றுமாலை,6:00- மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற தஞ்சை மாநகர தலைவரும், நூலை வெளியீடு செய்தவருமான எழுத்தாளர் அகிலா கிருஷ்ணமூர்த்தி, தலைமை தாங்கினார், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற தஞ்சை மாநகரப் செயலர்,உதவிப் பேராசிரியர் கிருத்திகா வரவேற்புரை ஆற்றினார்.
நூலினை அகிலா கிருஷ்ணமூர்த்தி வெளியிட, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற, தஞ்சை மாவட்டச் செயலாளர் முனைவர், அய்யாறு,ச. புகழேந்தி மற்றும் தஞ்சை மாவட்ட வங்கி ஊழியர் சங்கப் பொதுச்செயலாளர், முனைவர்,கே. அன்பழகன் ஆகியோர் நூலினை பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினர், நல்லாசிரியர்,இ. குழந்தைசாமி நூல் ஆசிரியர் பற்றி அறிமுகம் செய்தார், தஞ்சை முல்லை பாரதி அச்சக உரிமையாளர்,பன்மொழித் திறனாளர், அதம்பை, வை. இராமமூர்த்தி நூல் அறிமுகம் செய்தார். கவிஞர். வை. விநாயகம் ஏற்புரை வழங்கினார், உதவி பேராசிரியர் முனைவர்,தி.சங்கீதா சரவணன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார், நிகழ்ச்சியின் நிறைவாக பொருளாளர் வியானி விஷ்வா நன்றி உரையாற்றினார், நிகழ்வின் தொடக்கத்தில் மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி ,இந்துமணி,இரட்டைச் சகோதரிகள் இலக்கியா இனியா ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது .இந்த நிகழ்வில் கல்வியாளர்களும், அரசு ஊழியர்களும், கவிஞர்களும், பொதுமக்களும், திரளாகக் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளைத் மாநகரக்கிளை உறுப்பினர்கள் சஞ்சய்,ஜோஷ்வா,இரம்யா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment