சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் பகுதிக்கு தேர்தலை முன்னிட்டு பணியிடை மாற்றம் செய்ய பட்ட ஆய்வாளர்களில் சிவகங்கை மாவட்ட நகர் காவல் நிலைய ஆய்வாளரும் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு மாதங்களில் நகர் பகுதிகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது.மேலும் சிறப்பாக பணியாற்றி வருவதாக பொதுமக்களிடையே நன்மதிப்புகளை பெற்றவராக உள்ளார். இந்நிலையில் சிவகங்கை சார்ந்த சிலர் இணையதளம் மற்றும் செய்திகள் வாயிலாக காவல் ஆய்வாளர் புகைப்படம் பதித்து தவறான செய்திகளை பரப்பி வருவதாக சமூக ஆர்வலர் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்களிடம் கேட்ட பொழுது ஒருவர் பெயர் அடிபடுகிறது என்றாலே அவர் சிறப்பாக பணியாற்றுகிறார் என்று தானே அர்த்தம். அதே நேரத்தில் சிவகங்கை நகர் பகுதிகளில் அதிகமாக பிளாக் மதுபானங்கள் விற்றவர்களை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .இதன் காரணமாகவே பிளாக் மது விற்பனையாளர்கள் இவர் மீது இதுபோன்ற வதந்திகளை கிளப்புவதாகவும் கூறப்படுகிறது. இதுபோல் வதந்திகள் வந்த செய்திகளும் இதுவே மூல காரணமாக இருப்பதாகவும் தெரிய வருகிறது.
பொதுமக்கள் யாரேனும் ஆய்வாளர் மீது குற்றபுகார் அளித்துள்ளார்களா? அல்லது அவர் மீது ஏதும் அரசு துறைக்கு புகார்கள் வந்துள்ளனவா அப்பட்டமாக ஒருவர் மீது பழி சுமத்த கூடாது என்றும் கூறுகிறார்கள். இவர் பணியாற்றும் காலங்கள் சிவகங்கை நகர்பகுதி குற்றம் குறைந்து நல்ல நிலையில் உள்ளது என்றும் கூறுகிறார்கள் சில புகையிலை மற்றும் பிளாக் மதுபானங்கள் விற்பவர்கள் மீது தொடர்ந்து குற்ற வழக்கு பதிவுசெய்து குற்றத்தை குறைத்த வண்ணம் உள்ளார். அதன் காரணமாகவே தற்காலிகமாக காவல் ஆய்வாளர் மீது வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன என்று கூறப்படுகிறது .ஆகவே சிறப்பாக பணியாற்றும் இவர் சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் பணியாற்றினால் சிவகங்கை மக்களுக்கு பயமின்றி வாழ ஏதுவாக இருக்கும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து. மேலும் முகாந்திரம் அல்லாமல் காவல்துறையினர் மீதும் அல்லது சிறப்பாக செயலாற்றும் அரசு அலுவலர்கள் மீதும் கட்சியின் மீதும் அமைச்சர் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாகவும் செயல்படுபவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை வட்டாரங்களில் தெரிவித்தனர்.
நமது நிருபர்

Comments
Post a Comment