Skip to main content

முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு சாதனை புாிந்த தூத்துக்குடி திமுக கட்சியினர்.!

தூத்துக்குடி இந்தியாவில் 18வது மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் 7 கட்டமாக நடைபெற்றது. தேசிய அளவில் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டு இந்தியா முழுவதும் உள்ள இந்தியா கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளின் கூட்டணியோடு 543 தொகுதிகளிலும் போட்டியிட்டனர். தமிழகத்தில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் இந்தியா கூட்டணி தேர்தல் களத்தில் தமிழகம் புதுச்சோி உள்பட 40 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டு 40 தொகுதிகளிலும் முதலமைச்சர் ஸ்டாலின் மாநில இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டு துறை சிறப்பு திட்டஅமலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முழுமையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்தனர். 

அதே போல் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் பல தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டனர். அமைச்சர்கள் முழுமையாக எல்லா தொகுதிகளிலும் பணியாற்றியது மட்டுமின்றி மாவட்ட செயலாளர்களும் பல்வேறு அணி பொறுப்பாளர்களும் முழுமையாக களம் இறங்கி பணியாற்றினார்கள். கடந்த 3 ஆண்டுகால முதலமைச்சாின் சாதனைகளை எடுத்துக்கூறி தின்னை பிரச்சாரம் வரை கொண்டு சேர்த்தனர். இதற்கிடையில் ஓவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வாக்களர்களை சந்தித்து வாக்கு சேகாித்ததில் வேட்பாளர்களுக்கும் முக்கிய பங்குண்டு. 

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா காலக்கட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமலிருந்து வாகன போக்குவரத்து தடை பட்ட காலத்தில் திமுக துணைபொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி சென்னையிலிருந்து தனது வாகனம் மூலம் மாவட்டத்திற்கு வந்து எல்லா தொகுதிகளிலும் முடிந்த வரை மாவட்ட அமைச்சர்களோடு இனைந்து பல்வேறு உதவிகளை செய்தார். இயற்கையாகவே மக்கள் பணியிலிருந்த அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எதிர்பாராத கனமழையால் ஏற்பட்ட வௌ்ளத்தின் போது கொேரானா காலக்கட்டத்தையும் கடந்து கடுமையான பாதிப்புகள் ஏற்பட்ட நேரத்திலும் 40 நாட்கள் வாக்களித்த மக்களுக்கு நன்றி உணர்வோடு குறைகளை கேட்டறிந்து எல்லா பகுதிகளுக்கும் உதவிகளை செய்தார். இதற்கிடையில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி கோவில்பட்டி விளாத்திகுளம் ஆகிய 3 தொகுதிகளிலும் எல்லா தரப்பினருக்கும் பல்வேறு வகையில் உதவிகள் செய்து அனைத்து கட்டமைப்புகளையும் முறைப்படுத்தி தேர்தலுக்கு முன்பு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க பணிகளை செய்திருந்தார். 

அதே போல் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடைபராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர், ஒட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய  3 தொகுதிகளிலும் எல்லா தரப்பினருக்கும் பல்வேறு வகையில் உதவிகள் செய்து அனைத்து கட்டமைப்புகளையும் முறைப்படுத்தி தேர்தலுக்கு முன்பு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க பணிகளை செய்திருந்தார்.மாநகராட்சி பகுதியில் மேயர் ஜெகன் பொியசாமி எல்லா தரப்பினருக்கும் பல்வேறு வகையில் உதவிகள் செய்து அனைத்து கட்டமைப்புகளையும் முறைப்படுத்தி தேர்தலுக்கு முன்பு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க பணிகளை செய்திருந்தார்.

இதே போல் விளாத்திகுளம் தொகுதியில் மார்க்கன்டேயன் எம்.எல்.ஏவும், ஒட்டப்பிடாரம் தொகுதியில் சண்முகையா எம்.எல்.ஏவும் தங்களது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பணிகளை செய்திருந்தார்கள். நடைபெற்ற மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி எம்.பி. உள்பட 28பேர் களம் இறங்கி பிரச்சாரம் மேற்கொண்ட போது இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதாித்து பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர்கள் கீதாஜீவன் அனிதா ராதாகிருஷ்ணன் மேயர் ஜெகன் பொியசாமி, எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், சண்முகையா, ஆகியோர் எதிர்த்துநிற்கும் வேட்பாளர்களுக்கு டெபாசிட் கிடைக்க கூடாது. அதற்கேற்றாற் போல் எல்லோரும் பணியாற்ற வேண்டும். என்று தங்களுக்கு கொடுக்கப்பட்ட பகுதியில் பேசியது மட்டுமின்றி எந்த முறையில் மக்களை அனுக வேண்டும் என்று திட்டம் வகுக்கப்பட்டு கனிமொழி மிகப்பொிய வெற்றியை பெறுவதற்கு துணை புாிந்தது மட்டுமின்றி சொன்னது போல் மிக்பொிய ஆலமரமான அதிமுக உள்பட 27 பேர் டெபாசிட் இழந்தனர். 

அதிலும் குறிப்பாக 6 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளில் 52 வார்டுகள் உள்ளடக்கிய தூத்துக்குடி தொகுதியில் ஓரு வார்டுக்கு 2 ஆயிரம் வாக்குகள் வீதம் 1லட்சத்து 4 ஆயிரம் வாக்குகளை பெற்று தூத்துக்குடி முதலிடத்தை தட்டி சென்ற பெருமை கீதாஜீவனுக்கும், திருச்செந்தூர் தொகுதியில் 1 லட்சம் வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தை தட்டி சென்ற பெருமை அனிதா ராதாகிருஷ்ணனுக்கும். கிடைத்துள்ளது. மாவட்ட மக்களின் நிறைகுறைகளை எளிய முறையில் கேட்டறிந்து பணியாற்றிய காரணத்தால் அனைவரும் டெபாசிட் இழக்கும் நிலைமைக்கு சென்றுள்ளனர். ஓட்டுமொத்த மாவட்ட திமுகவும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு பெருமையை தேடி கொடுத்துள்ளனர்.


செய்தியாளர் அ .ரவி

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...