எடை போட வரும் சரக்கு லாரிகளால், ஊத்துக்குளி ரோட்டில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. திருப்பூர், ஊத்துக்குளி ரோடு நக ரின் மிக முக்கியமான ரோடுகளில் ஒன்று. திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன், தலைமை போஸ்ட் ஆபீஸ், ஸ்டேட் வங்கி அலுவலகம், திருப் பூர் திருப்பதி பெருமாள் கோவில், குருவாயூரப்பன் கோவில், மருத்துவ மனை, தனியார் வங்கிகள் என இந்த ரோட்டில் உள்ளன.ரயில்வே மேம்பாலத்தின் சுரங்க பாதை முடியும் இடத்தில் திருப்பூர் ரயில்வே கூட்ஸ் ஷெட் வளாகம் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சரக்கு ரயில் வாயிலாக கொண்டு வரப்படும் பொருட்கள் இங்கிருந்து லாரி கள் மூலம் உரிய இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.வாரத்தில் குறைந்தபட்சம், 5 நாள் என்ற அளவில், சரக்கு ரயில்களில் பொருட்கள் கொண்டு வந்து கையா ளப்படுகிறது. சராசரியாக ஒரு சரக்கு ரயில் வரும் போது, 250 முதல் 300 லாரிகள் வரை இந்த சரக்குகளை ஏற்றிக் கொண்டு செல்கின்றன.
கடும் வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் காணப் படும் இந்த ரோட்டில் சரக்கு லோடு ஏற்றிய லாரிகள் புறப்பட்டு ஊத்துக் குளி ரோட்டில், வாலிபாளையம் ரோடு அருகே, ரோடு அகலமாக உள்ள, பஸ் ஸ்டாப் பகுதியில் நிறுத்தி திருப்பப்படுகிறது மூன்று ரோடுகளிலும் வரும் வாகனங்கள் நீண்ட நேரம் நின்று போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஸ் ஸ்டாப்பிங் நிற்கும் பயணிகள் மருத்துவமனை சொல்லும் அன்புடன் சுவாவனம் நோயாளிகளும் அவதிப்படுகின்றனர் இது தவிர இந்த லாரிகள் டி எம் எம் சுரங்க பாலத்தைக் கடந்து அருகே உள்ள எடை மேடையில் எடை கணக்கிடவும் பல சமயங்களில் அங்குள்ள வங்கியில் டீசல் நிரப்பவும் வரிசையாக நிறுத்தப்படுகிறது இதற்காக வரிசை கட்டி நிற்கும் சரக்கு லாரிகள் பாலம் மீது மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்படுகிறது.
செய்தியாளர் கோவிந்தராஜன்

Comments
Post a Comment