ஐ.நா. பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் அமைப்பின் ஆசிய நாடுகளின் தூதருமான, டாக்டர். இரா. இன்பென்ட்ராஜ், பத்திரிக்கை செய்திக்கு விடுத்துள்ள அறிக்கையில்.
அவர் கூறியுள்ளதாவது: குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்நாடு, கேரளம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அகால மரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைகின்றேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தீவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டுகிறேன் என இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் வேங்கை குணா.

Comments
Post a Comment