சுமார் 530- தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் ஓட்டுனர், நடத்துனர்கள் சுமார் 450-பேர் உள்ளனர். இவர்களில் சக ஓட்டுனருக்கு ஜாமீன் கையெழுத்து போட்டு பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கலியமூர்த்தி, இராமச்சந்திரன் தலைமையில் இன்று காலை 12 மணிக்கு தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளரிடம் புகார் மனு அளித்தனர். அந்த புகாரில் கூறியுள்ளதாவது: தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை, பாபா நகர் விரிவாக்கம், மனை எண் 47 என்ற முகவரியில் வசித்து வரும் கண்ணன் மகன் பூபதி என்பவர் தஞ்சாவூர் நகர கிளையில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார்.
இவர் சக தொழிலாளர்களிடம் நட்பாகவும், குடும்ப உறவாகவும் பழகி தன்னுடைய குடும்பத் தேவைகளுக்கு தனியார் சிட் பண்டு நிறுவனத்தில் ஏலச்சீட்டில் ஏலம் எடுப்பதாகவும், அதற்கு சம்பள ரசீதும், ஜாமீன் கையெழுத்தும் போட வேண்டும் என்ற தனித்தனியாக பேசி, தனியார் சிட்பண்ட் நிறுவனங்களான ஜெயப்பிரியா, தனலட்சுமி சீனிவாசன், DNC சிட்ஃபண்ட் நிறுவனங்களில் தனது பெயரிலும், தாயார் விஜயா, மனைவி ஹெலன் ரோஸ், மைத்துனர் அந்தோணிசாமி பேரிலும் ஒன்றுக்கு மேற்பட்ட சீட்டுகளுக்கு கையெழுத்து போட வைத்துள்ளார். இவர் ஒரே நபர் பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட ஏலச்சீட்டுகளை எடுத்தது, ஒரு தொழிலாளரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட ஏலச்சீட்டுகளுக்கு ஜாமீன் கையெழுத்து பெற்றது உள்ளிட்ட மோசடிகளுக்கு தனியார் சிட்பண்ட் நிறுவனங்கள் மேற்படி பூபதிக்கு உதவியாக இருந்துள்ளனர். ஏலச்சீட்டுகளை எடுத்த பிறகு அவர் முறையாக மாதாமாதம் தவணைகளை செலுத்தவில்லை. இதனால் அந்த நிறுவனங்களில் இருந்து வந்த நீதிமன்ற நோட்டீஸ்பெற்ற தொழிலாளர்கள், பூபதி ஓட்டுனரிடம் கேட்ட போது நான் பணம் கட்டி விட்டேன், அவர்கள் தவறாக அனுப்பி உள்ளார்கள், நான் நேரடியாக பேசிக் கொள்கிறேன். உங்களுக்கு பாதிப்பு வராது என்று பொய்யாக கூறி அந்த கடிதங்களையும் வாங்கி வைத்துக்கொண்டு நீதிமன்றத்திலும் ஆஜராகவில்லை. இதனால் ஒருதலைபட்சமாக தீர்ப்பளிக்கப்பட்டு, கும்பகோணம் கழக நிர்வாகத்தால் ஒவ்வொரு தொழிலாளலி சம்பளத்திலும் மாதாமாதம் சுமார் ரூ.5,000/- முதல் 10,000/- வரை பணம் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.
ஒட்டுமொத்தமாக ரூ.1,00,000/- கும் மேலாக மாதம் மாதம் இந்த தவணைகளை தொழிலாளர்கள் செலுத்தி வருகின்றனர். அதனால் குடும்ப பொருளாதாரம் மற்றும் பிள்ளைகளின் கல்வி உள்ளிட்ட செலவுகள் பாதிக்கப்படுகின்றன. குடும்பங்களை நடத்த முடியவில்லை, செலவுகளை சமாளிக்க முடியவில்லை, நாங்கள் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். ஜாமின் கையெழுத்து பெற்று நூதனமோசடி செய்த பூபதி ஓட்டுநர் மீதும், அவருக்கு உடனடியாக இருந்த சிட்பண்ட் நிறுவனங்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தஞ்சாவூர் வழக்கறிஞர்கள் இ.சதீஷ்குமார், கே.ஹரிஹரசுதன், அ.துரைராஜ், சட்டக்கல்லூரி மாணவர்கள் எஸ்.சையது அக்ரம், எஸ்.மோனிகா, ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளனத்தின் மாநில துணைத்தலைவர் துரை.மதிவாணன், சி.பி.எம்.எல். (மக்கள் விடுதலை) மாநில துணை தலைவர் இரா.அருணாச்சலம் மற்றும் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கலியமூர்த்தி, பாவேந்தன், பழனி, ராமச்சந்திரன், பாலதுரை, ஸ்ரீதர், தியாகராஜன், பிரசன்னா, கண்ணன், சாமிநாதன், ரமேஷ், சேகர், ஆரோக்கியசாமி, நவமணி, வினோத் எடின் ப்ரோ,குமார், அலுவலக பணியாளர் சாந்தி உள்ளிட்ட 20க்கு மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
செய்தியாளர் வேங்கை குணா.

Comments
Post a Comment