திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையத்திலிருந்து மகளிருக்கான இலவச அரசு பேருந்து பொன்னேரி ஆலாடு தத்தைமஞ்சி காட்டூர் வழியாக மீஞ்சூர் செல்லும் பேருந்தில் பள்ளி மாணவர்கள் 40 பயணிகளுடன் பொன்னேரியில் இருந்து சென்று கொண்டிருந்த நிலையில் பொன்னேரி அடுத்த ஆலாடு ரயில்வே கேட்டை கடந்த போது பிரேக் பிடிக்காததால் எதிரே பழுதடைந்து நின்று கொண்டிருந்த மினி லாரி மீது இடித்து பேருந்து கூடவே இழுத்துச் சென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அரசுப் பேருந்து சாலையை விட்டு கீழே இறங்கி மணலில் சிக்கி நின்றது.
இதில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டமாக காயம் இன்றி உயிர் தப்பித்த நிலையில் பேருந்தில் பயணித்தவர்கள் கூச்சலுடன் பேருந்தில் இருந்து இறங்கி நடந்து சென்றனர். அரசு பேருந்துகள் பழமையான பேருந்துகளாக உள்ளது எனவும் அடிக்கடி பிரேக் டவுன் ஆகி நிற்பதாகவும் பராமரிப்பு இல்லை எனவும் பொன்னேரி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட அரசு பணிமனைகளில் உள்ள பேருந்துகளில் முறையாக தர ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்போதுதான் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படாமலும் பேருந்துகள் பழுதாகி நடுவில் நிற்கும் நிலையும் ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் ராதாகிருஷ்ணன்

Comments
Post a Comment