தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா வட்ட சட்டப்பணிகள் குழுவில் இன்று 10.06.2024 சார்பு நீதிபதி திருமதி.D. ஆஷா கௌசல்யா சாந்தினி அவர்கள் மொபைல் வேன் பிரச்சார விழிப்புணர்வு நடைபெற்றது. முதலில் சார்பு நீதிபதி மொபைல் வேன் பிரச்சாரத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பிறகு பொதுமக்களுக்கு இலவச சட்ட உதவி சம்மந்தமாக துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. மேற்படி நிகழ்வில் நீதித்துறை நடுவர் திரு.S.வரதராஜன் அவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், காவல் துறையினர், வழக்காடிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேற்படி மொபைல் வேன் பிரச்சார நிகழ்வை திருச்செந்தூர் தாலுகா சட்டப்பணிகள் குழுவின் இளநிலை நிர்வாக உதவியாளர் செல்வி.A. முத்து லக்ஷ்மி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
செய்தியாளர் அ.ரவி.

Comments
Post a Comment