இணையதளம் சேவை பிரச்சனையினால் நேரடி நெல் கொள்முதல் பாதிப்பு.! இதனை விரைந்து சரி செய்யுமாறு நுகர்பொருள் வாணிப கழகம், மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் தமிழரின் தலைமை விவசாயிகள் சங்க தலைவர் கோரிக்கை..
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுக்காவில், தமிழக அரசால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் விபரங்களை பதிவு செய்யக்கூடிய கையடக்க கணினி பயன்படுத்தப்படுகிறது. அதன் மூலமாகவே எல்லா விவரங்களையும் பதிவு செய்யப்படுகிறது. இன்று 1.6.2024 காலையில் ஆன்லைன சர்வர் பிரச்சனை எழுந்து உள்ளதால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் காலத்தோடு அறுவடை செய்து கொண்டு வரும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய முடியவில்லை.
இதற்கு என்ன காரணம் என்றால் ஆன்லைன் சர்வர் பிரச்சனையே. இதனால் நெல்மூட்டைகள் தேக்கம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்தத் பிரச்சனையை விரைந்து சரி செய்ய, தஞ்சாவூர் நுகர்பொருள் வாணிபகழகம், மற்றும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தமிழரின் தலைமை விவசாயிகள் சங்க நிறுவனரும்,தலைவருமான, டாக்டர். அருணா அஜீஸ் தஞ்சை மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் இதனை ஒரு கோரிக்கையாக வைப்பது மட்டுமன்றி, இதுபோன்று சர்வர் பிரச்சனைகள் ஏற்படும்பொழுது இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் இதனை ஒரு கோரிக்கையாக வைத்துள்ளார்.செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment