திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வராமல் அனைவரின் இருக்கைகளும் காலியாக இருந்தது மேலும் ஊழியர்கள் யாரும் இல்லாமல் மின்விசிறிகள் ஆங்காங்கே ஓடிக் கொண்டும் மின்விளக்குகள் மட்டும் எரிந்து கொண்டும் இருந்தது.
நேற்று பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஊழியர்கள் பணிக்கு சென்ற நிலையில் இன்று பெரும்பாலான ஊழியர்கள் அலுவலகத்திற்கு பணிக்கு வராமல் அலுவலகம் வெறிச்சோடி காட்சியளித்து.இதனால் பல்வேறு பணிகளுக்கு வந்த பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
செய்தியாளர் ராதா கிருஷ்ணன்

Comments
Post a Comment