காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து..!
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் 5,72,155 வாக்குகள் வித்தியாசத்தில்வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞன் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
முன்னாள் திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர் லயன் டி.ரமேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் பொன்னேரி ஏ.ஜி.சிதம்பரம், திருவள்ளூர் தெற்கு மாவட்ட துணை தலைவர் பி.பாபு வழக்கறிஞர் பிரிவு மாநில நிர்வாகிகள் ஆர்.சசிகுமார், கே.இமாலய அருண் பிரசாத் , இளைஞர் காங்கிரஸ் ஏ.திவாகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர் ரஞ்சித்.

Comments
Post a Comment