தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை, ஜமால் உசேன தெரு எதிர்ப்புறம் வீர ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம், சுமார் 22-ஆண்டுகளாக இந்தஇடத்தில் செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதே. இந்த வீர ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு, சுமார் 25-கிமீ சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து வீர ஆஞ்சநேயரை வந்து வழிபடுகின்றார்கள், காரணம் வீர ஆஞ்சநேயரை வழிபடுவதால் இவர்களுடைய கஷ்டங்களும், பொருளாதார முன்னேற்றங்களும், பக்தர்களுடைய வேண்டுதலும், குழந்தை பாக்கியமும், ஏற்பட்டுள்ளது, இவையாவும் வீர ஆஞ்சநேயரின் சக்தியால் நிறைவேற்றப் படுகிறது.
இதன் காரணமாக வீர ஆஞ்சநேயரின் சக்தியை கண்டு, சனிக்கிழமை தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்த கோடிகள் காலை,மாலை, இருவேளைகளிலும் திரண்டு வருகின்றார்கள் என்றே குறிப்பிடலாம், சனிக்கிழமையான இன்று, காலை 7 மணி முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது, பாலபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது, இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அருட்பிரசாதமும், அன்னதானமும், வழங்கப்பட்டது. இன்று நடைபெற்ற காலைவேளைநிகழ்வில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வீர ஆஞ்சநேயரின் அருளைப்பெற்றனர்.
செய்தியாளர் வேங்கை குணா.

Comments
Post a Comment