செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சியில் அமைந்துள்ள பவானி நகர் ஊர்ப்புற நூலக வாசகர் வட்டம் சார்பில் பவானி நகர் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மாணவ-மாணவிகள் தொடர்ந்து நூலகத்திற்கு வருகை தந்தால் அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனையொட்டி தொடர்ந்து நூலகத்திற்கு வருகை தந்து புத்தகங்களை படித்து வந்த 15க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி பவானி நகர் வாசகர் வட்டத் தலைவர் எம்.முகம்மது அபுபக்கர் தலைமையில் நடைபெற்றது.
நூலகரும் வாசகர் வட்டச் செயலாளருமான ரமணி அனைவரையும் வரவேற்றார். வாசகர் வட்ட உறுப்பினர் இ.மாரியப்பன், பவானிநகர் குடியிருப்போர் நலச் சங்கப் பொருளாளர் டெக்கரேட்டர் பி.சேகர், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 45க்கும் மேற்பட்ட குழந்தைகளும் பெண்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment