பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் காஞ்சிபுரத்தை சேர்ந்த நகராட்சி ஒப்பந்ததாரர் சுடர்மணி தஞ்சையில் கைது.!
தஞ்சை மாநகராட்சியில் ஆணையராக பணியாற்றி வரும் மகேஷ்வரி தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் கடந்த 2ம் தேதி புகார் அளித்தார்.புகார் மனுவில் தான் காஞ்சிபுரம் நகராட்சி ஆணையராக பணியாற்றிய போது நகராட்சி ஒப்பந்ததாரர் சுடர்மணி என்பவர் விதிமுறைகளை மீறி பணி செய்யாமல் இருந்ததால அவரது ஒப்பந்தத்தை ரத்து செய்தேன்.இதற்கிடையே நான் பணி மாற்றலாகி தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக தற்போது பணியாற்றி வருகிறேன்.
இந்த நிலையில ஒப்பந்ததாரர் சுடர்மணி உள்நோக்கத்துடன் என்னை பற்றி பாலியல் ரீதியாக இழிவுப்படுத்தி ஆடியோ வாட்ஸ் அப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பரப்பி வருகிறார்.எனவே இவர் மீதும், மன்னார்குடியை சேர்ந்த பாலு என்பவர் மீதும சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.இதன் பேரில் சுடர்மணி மீது தகவல் தொழில்நுட்பங்களை தவறாக பயன்படுத்துதல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் தஞ்சை மேற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து . காஞ்சிபுரத்தில் தலைமறைவாக இருந்த ஒப்பந்ததாரர் சுடர்மணியை கைது செய்து தஞ்சை அழைத்து வந்தனர்.தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து பின்னர் ஒப்பந்ததாரர் சுடர்மணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment