தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், செ.புதூர் உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் அவருடைய வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், எஸ் புதூர் ஸ்கைவெல் சைன் லைன் சங்கம், கவின்மிகு தஞ்சை இயக்கத்துடன் இணைந்து மரம் நடு விழாவில், பள்ளி மைதானத்தில்,20- மரக்கன்றுகள் நடப்பட்டன.
பள்ளித் தலைமையாசிரியர் கோ. தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் லயன் ச. கார்த்திகேயன், திருவிடைமருதூர் வட்டக்கிளைத் தலைவர், ஆ. காளிதாஸ்,செயலர் பி.துனீசியா, பொருளர்,பி. பாரதிதாசன், துணைச் செயலர்,ஆ. அந்தோணிராஜ், லயன்ஸ் சங்கத் தலைவர் லயன்,ச. ஆனந்த், செயலர் மற்றும் தேசிய பசுமைப்படை ஆசிரியர் லயன்,கி. சுரேஷ்குமார் மற்றும் மாணவ மாணவிகள் மரம் நடும் சேவையில் பங்கேற்றனர். விழாவில் , உலக வெப்பமயமாதலைக் குறைக்க, தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்கவும் நெகிழியைத் தவிர்க்கவும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment