திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களை நேரில் சந்தித்து நஞ்சராயன் குளம் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் வாழ்த்து.!
திமுகழகம் தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.சுப்பராயன் எம்.பி. அவர்களை இன்று காலை அவரது அலுவலகத்தில் நஞ்சராயன் குளம் பாதுகாப்பு சங்க நிா்வாகிகள் தலைவர் KAK.கிருஷ்ணசாமி, தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணை பொதுச் செயலாளரும், சமூக ஆர்வலர்களாகிய ஈ.பி.அ.சரவணன் உள்ளிட்டவர்கள் மரியாதை நிமித்தமாக பொன்னாடை அனிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.K.சுப்பராயன் எம்.பி. அவர்களை இன்று அவரது அலுவலகத்தில் நேரிடையாக நஞ்சராயன் குளம் பாதுகாப்பு சங்க நிா்வாகிகள் தலைவர் KAK.கிருஷ்ணசாமி, திருப்பூர் பனியன் சிட்டி கன்ஸ்யூமர் வெல்பர் அசோசியன் செயலாளர் துரைசாமி, நஞ்சராயன் குளம் பாதுகாப்பு சங்க நிா்வாகிகள் செயலாளர் ஈஸ்வரன், துணை செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் மோகன்குமார், நிர்வாகிகள் நாகேந்திரன், கார்த்தி, யுவராஜ், ஆண்டிபாளையம் ரவி, தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணை பொதுச் செயலாளரும் சமூக ஆர்வலர்களாகிய ஈ.பி.அ.சரவணன்,ஜெகதீஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் எம்.பி. அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
செய்தியாளர் கோவிந்தராஜன்

Comments
Post a Comment