திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கும்மிடிப்பூண்டி வட்டாச்சியர் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகளுக்கு முறையாக பணிகளை செய்ய வேண்டுமென எச்சரிக்கை விடுத்தார்
வருவாய் துறையினர் முறையாக பணி செய்யுங்கள் தொலைத்து விடுவேன் உங்களை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுப்பேன் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு சங்கர் கும்மிடிப்பூண்டி வட்டாச்சியர் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகளுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்தார்.ஆம் பசலி வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி துவக் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தொடங்கி வைத்தார் வருகிற 19ஆம் தேதி வரை ஜமாபந்தி நடைபெறுகிறது பூதூர் நேமலூர் கண்ணங்கோட்டை உள்ளிட்ட 12 கிராமங்களுக்கு பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்களை பெற்ற அவர் கும்மிடிப்பூண்டி தொகுதி தமிழகத்தின் முக்கியமான தொகுதி என்றும் ஆவணங்கள் அனைத்தும் கிராம நிர்வாக அலுவர் வருவாய் ஆய்வாளர் வட்டாட்சியர் வரை முறையாக கண்காணித்து பாதுகாக்க வேண்டும் தவறுகள் நேர்ந்தால் தொலைத்து விடுவேன் என்றும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.
பதிவேடுகள் கிராம வரைபடம் இல்லாமல் வரும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் ஜமாபந்தி நிகழ்வில் பரபரப்பு ஏற்பட்டது கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ப்ரீத்தா கும்மிடிப்பூண்டி தாலுகாவை உரிய முறையில் செயல்படுத்தவில்லை என தெரிவித்த அவர் புதிதாக பொறுப்பேற்றுள்ள வருவாய் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அனைவரும் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் கிராம விவரங்களை முழுமையாக தெரிந்து கொண்டு பணியாற்ற வேண்டும் எனவும் அறிவுரை வழங்கியதுடன் அனைத்து கோப்புகளையும் கையில் வைத்திருக்க வேண்டும் எனவும் அரசு இடம் ஆக்கிரமிப்பு குறித்து புகார் அளித்தால் உரிய நடவடிக்கை வருவாய்த் துறையினர் உடனுக்குடன் எடுக்க வேண்டும் என அவர்
தெரிவித்தார்..
.jpeg)
Comments
Post a Comment