திருவள்ளூர் மாவட்டம்ஊத்துக்கோட்டை பேரூராட்சி அமமுக சார்பில் பக்ரித் பண்டிகையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நாகலாபுரம் சாலை மோற்கு காவாங்கரையில் நடந்தது இதில் பேரூர் செயலாளர் T.சரவணன் தலைமை தாங்கினார்.பூண்டி ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கோட்டீஸ்வரன், விவசாய அணி அமைப்பாளர் அன்பு, தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் உதயகுமார், பொருளாளர் பஷீர்பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அனுப்பம்பட்டு P.V.சங்கர் ராஜா 100 கும் மேற்பட்ட ஏழை எளிய இஸ்லாமிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் செல்லா, கவுஸ், முருகேசன், சுபாஷ், குண சுந்தரம், நசீர், மகபூப், கலந்து கொண்டனர். இறுதியில் அமானுல்லா அனைவருக்கும் நன்றி கூறினார்.
செய்தியாளர் துரை பன்னீர் செல்வம்

Comments
Post a Comment