தூத்துக்குடி யுஜிசி ரோட்டில் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.!
தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட டபுள்யுஜிசி ரோட்டில் நடைபெற்று வரும் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி அவர்கள் இந்தப் பணிகளினால் டபுள்யுஜிசி ரோடு, ஜெய்லானி தெரு, குமாரர் தெரு, பங்களா தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சீரான குடிநீர் வழங்கப்படும் என்றும் பணிகள் நடைபெற்றதனால் மேடு பள்ளமாக உள்ள அந்த சாலையும் சீரமைத்து தரப்படும் என்றும் தெரிவித்துக் கொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் மாநகர செயலாளர் .முரளி அவர்கள், மாநகர மீனவரணி அமைப்பாளர் .டேனி அவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
செய்தியாளர் அ. ரவி

Comments
Post a Comment