தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் (கும்பகோணம்) நடத்துனராக 29- ஆண்டுகளும், பரிசோதராக 10 ஆண்டுகளும் மிகச் சிறப்பாக பணியாற்றி,31.5.2024 அன்று பணி ஓய்வு பெற்று, கோணூர் நாடு முத்துமாரியம்மன் கோவிலில், பணி நிறைவு பாராட்டு விழா,3.6.2024 அன்று மதியம்,12:00- மணியளவில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து உப்புண்டார்ப்பட்டி இல்லத்தரசியும், பரிசோதகர் காமராசு அவர்களின் துணைவியாருமான, திருமதி. லட்சுமி காமராஜ் இவர்களுடைய 60-வது திருமணமும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவர்களிடம் வருகை தந்த அனைவரும் ஆசிர் பெற்று, இருவருக்கும் சந்தன மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக இந்நாள், முன்னாள் பரிசோதகர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், அனைத்து சங்கங்களைச்சார்ந்த நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்த உற்றார் , உறவினர்கள், நண்பர்கள மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் வேங்கை குணா.

Comments
Post a Comment