Skip to main content

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் முறைகேட்டை விசாரணை செய்ய, வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

 தஞ்சாவூர், பூதலூர் ஒன்றியம், வெண்டையம்பட்டி ஊராட்சியில் கடந்த  2018-ம் ஆண்டு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்,கழிவறை கட்டும் திட்டம் உள்ளிட்ட திட்டப்பணிகளில் அரசு அலுவலர்கள் கூட்டு சேர்ந்து சதி செய்து அரசு பணத்தை மோசடி செய்தது தொடர்பாக  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல கட்ட போராட்டம் நடத்தி பின்னர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் முறைகேடுகளை விசாரிக்க தஞ்சை மாவட்ட நிர்வாகத்திற்கு வழிகாட்டப்பட்டது.அதன் அடிப்படையில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் ஒரு குழுவினை அமைத்து ஆய்வு மேற்கொண்டது. இதில் கொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்றும், வீடு மற்றும் கழிவறை கட்டாமல் பணம் பெறப்பட்டது  என்றும் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

அதன் பேரில் விஜிலென்ஸ்-ல் புகார் அளிக்கப்பட்டு,வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆறு ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டது . தொடர்ந்து முயற்சித்து தற்போது  விஜிலென்ஸ் அலுவலகத்தில் சென்று கேட்டபோது வழக்கு முடிக்கப்பட்டது என்றும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை கொடுக்கப்பட்டதாகவும், அறிக்கையின் மீது ஆடிட்டர் விசாரணை நடத்துவதாகவும் விஜிலென்ஸ் டி எஸ் பி தெரிவித்தார். இதன் மீது ஆடிட்டரிடம் நேரடியாக சென்று கேட்டபோது இந்த முறைகேடு வழக்கு வழிகாட்டுதலில், கழிவறை முறைகேட்டிற்கு  மட்டும் என்னிடம் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளதாகவும், வீடு கட்டுவதில் உள்ள முறையீடு தொடர்பாக தனக்கு எந்தவித அறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறினார் .அதன் பின் விஜிலன்ஸ் அலுவலகத்தில் வீடு கட்டும் முறைகேடு சம்பந்தமாக நடவடிக்கை என்ன எடுத்தீர்கள் என்று கேட்ட போது , சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்கள்.

ஆனால் இது நாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரியவருகிறது. பூதலூர் ஒன்றியம் வெண்டையம் பட்டி ஊராட்சியில்  பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் ஏறத்தாழ ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளது என்பது தொடர்பாக உயர் நீதிமன்ற வழிகாட்டுதல், மாவட்ட ஆட்சியர் ஆய்வு குழு, அதன் அடிப்படையில் விசாரணை, விசாரணை முடிவில் முறைகேடு நடந்துள்ளது உண்மை என தெரிய வந்த பிறகும் விஜிலென்ஸ் அலுவலகம் முறைகேட்டிற்கு காரணமான அப்போதைய வட்டார வளர்ச்சி அலுவலர் து.ரெகுநாதன், பொறியாளர் ஜி.ரமேஷ், பணி மேற்பார்வையாளர் ஜி.ராதாகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் வி.குமார் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றும் நோக்கில் இந்த முறைகேட்டின் வழக்கை அலைக்கழிக்க வைப்பது சந்தேகத்தை தருகிறது. ஆதலால் வீடு கட்டும் திட்டத்தில் உள்ள முறைகேட்டினை விசாரித்து காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்திடவும்,சிபிசிஐடி பிரிவுக்கு இந்த வழக்கினை மாற்ற தமிழ்நாடு அரசையும், தஞ்சை மாவட்ட நிர்வாகத்தையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது என தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி  நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.இராமச்சந்திரன்  செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் வேங்கை குணா.

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...