செங்குன்றம் அடுத்த தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சி சமுதாய நலகூடத்தில் தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் 10-ம் வகுப்பு,11ம்வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் தேர்ச்சிபெற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா சமூக சேவகர் டேவிட்சன் ஏற்பாட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் கவிதாடேவிட்சன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அருண்குமார், புதுவாழ்வு சமூக சேவை தொண்டு நிறுவனர் செங்குட்டுவன், வார்டு உறுப்பினர்கள் வளர்மதிஈஸ்வரன், தரணிதரன் ஆகியோர் கலந்துகொண்டு தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் உள்ள அரசு பொதுதேர்வில் தேர்ச்சிபெற்ற சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.3000, இரண்டாம் பரிசு ரூ.2000, மூன்றாம் பரிசு ரூ.1000 மற்றும் புத்தகப்பை போன்றவற்றை வழங்கி பாராட்டினர். இதில் வார்டு உறுப்பினர் கீதாவிஜி, அகிலன், கதிரவன்பிரசாத், பால்ராஜ், மூர்த்தி, ஆல்பட், முரளி,எழில்,ஊராட்சி செயலர் உல்லாசம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் பிரியாணி உணவு வழங்கப்பட்டது.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment