Skip to main content

வாக்குறுதியை நிறைவேற்றிய அதிமுக தொண்டருக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்..

தூத்துக்குடி நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுக 10 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தூத்துக்குடி திரவியபுரம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் வயது 75, பந்தயம் கட்டியிருந்தார். ஆனால் அதிமுக ஓரு தொகுதியிலும் வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்ததையொட்டி தேர்தல் நேரத்தில்கொடுத்த வாக்குறுதியின் படி தனது காலில் கத்தியால் வெட்டி ரத்தத்தை சிந்தி வாக்குறுதியை நிறைவேற்றினார். இதனயைடுத்து அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் ஆறுதல் கூறி உதவிகளை வழங்கினார்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எதிா்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியனை தொடர்பு கொண்டு அதிமுக தொண்டரை அழைத்துக்கொண்டு சேலத்திற்கு வருமாறு கூறியிருந்தார். இதனையடுத்து முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் செல்வக்குமாரை அழைத்து சென்று சேலம் நெடுஞ்சாலை நகாில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் சந்தித்தனர். அதிமுகவிற்கு எதிர்காலம் இருக்கிறது. என்று தொண்டருக்கு ஆறுதல் கூறி உதவி செய்தார். 

     இதுகுறித்து முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கூறுகையில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எதிா்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டதிற்கிணங்க அதிமுக தொண்டரை அழைத்து வந்து சந்தித்தோம். அப்போது பல்வேறு அறிவுரைகளை வழங்கியது மட்டுமின்றி நடைபெற்று முடிந்த தேர்தல்கள் குறித்தும் கேட்டறிந்தது மட்டுமின்றி எதிர்வரும் 2026ல் பொதுத்தேர்தலை எதிர்கொள்வதற்கு மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்றுங்கள் பொதுமக்களின் குறைகள் எதுவாக இருந்தாலும் அதை தீர்த்து வைப்பதற்கு உழைக்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டார் என்று கூறினார். 

தெற்கு மாவட்ட அதிமுக வர்த்தக அணி செயலாளர் துரைசிங், வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச்செயலாளர் ஜீவாபாண்டியன், போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நலச்சங்க மண்டலத்தலைவர் பேச்சியப்பன், தெற்கு மாவட்ட வடக்குபகுதி தகவல் தொழில்நுட்ப பிாிவு ராஜன், மற்றும் விக்னேஷ் பாண்டியன், ஆகியோர் சந்திப்பின் போது உடனிருந்தனர்.


செய்தியாளர் அ. ரவி 

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...