அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஜெ.மேலூர் கிராமத்தில் ஸ்ரீ செல்லியம்மன், ஸ்ரீ மாரியம்மன், மற்றும் ஸ்ரீ நாச்சியார் அம்மன் ஆகிய திருக்கோவில்கள் உள்ளன.வருடா வருடம் இக்கோவில்களுக்கு அம்மன் வீதியுலா மற்றும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டும் ஸ்ரீ செல்லியம்மன் ஸ்ரீ மாரியம்மன் மற்றும் ஸ்ரீ நாச்சியார் அம்மன் ஆகிய திருக்கோவில்களின் வீதி உலா கடந்த 25.05.2024 சனி கிழமை இரவு நடந்தது.
இன்று 02.06.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் தேர் திருவிழா நடைபெறும்.அதனை முன்னிட்டு சுற்றுப் புற கிராம மக்கள், மற்றும் ஊர் பொதுமக்கள்,பக்தர்கள் கலந்து கொண்டு தேர் திருவிழாவை கண்டு களிக்கும் படி கேட்டுக் கொள்ள படுகிறது.விழா ஏற்பாடுகளை ஊர் நாட்டாண்மைகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Comments
Post a Comment