உலக பால் தின விழாவை முன்னிட்டு சிறந்த மாடுகள் மற்றும் கன்றுகளை வளர்ப்பவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு.!
திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் உணவு மற்றும் பால் வளத் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் இந்திய பால்வள சங்கம் இணைந்து நடத்தும் உலக பால் தினத்தை முன்னிட்டு கால்நடை நல முகாம் சிறந்த கறவைப் பசு தேர்வு போட்டி சிறந்த கன்றுகளுக்கான தேர்வுபோட்டி தூய பால் உற்பத்தி பற்றி குறும்பட ஒளிபரப்பு நிபுணர் கருத்துரை வழங்கினர்.
பின்னர்பள்ளிமாணவர்களுக்கான ஓவிய போட்டி மற்றும் தேர்வு பெறும் கறவை பசுக்கள் மற்றும் கன்றுகளுக்கு கால்நடை தீவனம் மற்றும் தாது உப்புக்கலவை பரிசாக வழங்கி சிறப்பித்தனர்.இந்திய பால்வள சங்கம் -தமிழ்நாடு பிரிவு துணைத் தலைவர் முனைவர் டி.ஆர்.டோரதி புஷ்பராணி, இந்திய பால்வள சங்கம் -தமிழ்நாடு பிரிவு செயலாளர் முனைவர் டி.ஆர்.புகழேந்தி,இந்திய பால் வளம் சங்க-தமிழ்நாடு பிரிவு பொருளாளர் சந்திரசேகர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதில் மெய்யூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பி.மீனாபிரகாசம்,மெய்யூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஏ.தேன்மொழி ஏழுமலை,வார்டு உறுப்பினர்கள் என்.லட்சுமிகாந்தன்,எஸ்.பச்சையம்மாள்சீனிவாசன் ஆர்.வினாயகம்ரோஸ், டி.மாரிமுத்து,ஜெ.அம்முஜெகன்,ஆர்.சி.ரமேஷ், கே.ரகுபதி,ஜெ.லலிதா ஜீவா,ஆகியோர் முன்னிலை வகித்தனர் .உணவு மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முனைவர் என்.கற்பூரசுந்தரபாண்டியன் வரவேற்புரை ஆற்றினார்.நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் மெய்யூர் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.லாவண்யா சரத்பாபு நிகழ்ச்சிக்கு அறிமுக உரையாற்றினார்.
முதல்வர் உணவு மற்றும் பால்வளத் தொழில் நுட்பக் கல்லூரி முனைவர் என்.குமரவேலு,வாழ்த்துரை வழங்கினார்கள்.துணைத் தலைவர் உணவு மற்றும் தொழில்நுட்ப கல்லூரி முனைவர் முருகன்,துணைத் தலைவர் உணவு மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முனைவர் அய்யாவு பிரேம்நாத் மனோகர்,துணைத் தலைவர் உணவு மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முனைவர் ரீட்டா நாராயணன்,சிறந்த கறவை மாடுகள் மற்றும் கன்றுகளுக்கு பரிசு வழங்கிய சிறப்புரை ஆற்றினார்.திட்ட பொது மேலாளர் ஆவின் மருத்துவர் பி.பாலபூபதி,பள்ளி மாணவ மாணவியருக்கு பரிசு வழங்கி உரையாற்றினார் .தலைவர் இந்திய பால்வள சங்கம் -தமிழ்நாடு பிரிவு கே.எஸ்.கண்ணா,சிறந்த பண்ணையாளர்களுக்கு பரிசு வழங்கி விழா பேருரை ஆற்றினார்.தொலைதூரக் கல்வி இயக்குனர் முனைவர் ஆர்.அனில் குமார்,இறுதியில் நன்றியுரை ஆற்றினார் .முனைவர் பி.கீதா உணவு மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இந்த நிகழ்ச்சியில் மெய்யூர் ஊராட்சி செயலாளர் டி.டில்லிபாபு மற்றும் கிராம பொதுமக்கள் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் ராதா கிருஷ்ணன்

Comments
Post a Comment