திருவள்ளூர் மாவட்டம் பண்டிகாவனூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீலட்சுமி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
யாக கலச பூஜைகளுடன் கலச நீர் மேல தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கோபுர கலசங்களுக்கும் விநாயகர் துர்க்கை தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் கலச நீர் கொண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பின்னர் பக்தர்கள் மீது தெளித்தனர் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ லஷ்மி அம்மனை தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகத்தினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர் பண்டிக்காவனூர் ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமார் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரண்யா சரவணன் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.
செய்தியாளர் ராதாகிருஷ்ணன்.

Comments
Post a Comment