தூத்துக்குடி கலைஞர் 101வது பிறந்தநாளை முன்னிட்டு மாநகர பகுதியான 15வது வார்டு சாா்பில் திரவிய ரத்தின நகர் பகுதியில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட பிரதிநிதியும் கவுன்சிலருமான இசக்கிராஜா தலைமை வகித்தாா். மேயர் ஜெகன் பொியசாமி கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கலைஞர் படத்திற்கு மாியாதை செலுத்தி 500 பேருக்கு சேலை, வழங்கி பேசுகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க கலைஞாின் 101வது பிறந்தநாள் விழா நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. அதனடிப்படையில் இந்த பகுதியிலும் நடைபெறும் தேர்தலுக்கு பிறகு முதல்விழா மழை காலங்களிலும் தேர்தல் காலங்களிலும் அதிமுக உள்பட பல எதிர்கட்சிகள் போட்டோவுக்கு போஸ் மட்டும் கொடுத்துவிட்டு சென்று விடுவார்கள் ஆனால் மக்களுக்காக பணியாற்றும் கட்சி திமுக மாநகர பகுதியில் 90 சதவீதம் சாலை பணிகள் நிறைவடைந்துள்ளன. அதிலும் சிறிய பொிய என புதிதாக 2000 சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிக்கும் இபி காலணியில் பணி நடைபெறுகிறது. விரைவில் நிறைவு பெறும். நடைபெற்ற நாடாளுமன்ற தோ்தலில் திமுகவிற்கு ஓட்டுமொத்தமாக ஆதரவு கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றியை தொிவித்துக்கொள்கிறேன். மக்கள் பணியை தொடர்ந்து செய்வது தான் எங்களது கடமையாகும் முதலமைச்சரும் அப்படி தான் எங்களுக்கு உத்தரவிட்டிருந்தார்கள். பணி செய்யாதவர்கள் பதவியில் இருக்க முடியாது. பல கட்சிகள் போட்டியிட்டும் கனிமொழி எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழக்கும் வகையில் கட்சி பணியையும் சிறப்பாக செய்தவர்களுக்கு நன்றிகடன் பட்டுள்ளேன். தொடர்ந்து எல்லோரும் மக்கள் பணியாற்றுவோம் என்று பேசினார்.
விழாவில் கவுன்சிலர்கள் கண்ணன், பொன்னப்பன், வட்டச்செயலாளர்கள் பொன்பெருமாள், சுரேஷ், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ, மாநகர ெதாழிலாளர் நல அணி அமைப்பாளா் முருகஇசக்கி, விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் அன்பழகன், மாநகர இலக்கிய அணி தலைவர் சக்திவேல், வட்ட அவைத்தலைவர் பிரம்மசக்தி, துணைச்செயலாளர் ராஜ்குமாா், வட்டப்பிரதிநிதிகள் செல்வம், பேச்சிராமன், சோமசுந்தரம், கணேசன், ஞானப்பிரகாசம், நிர்வாகிகள் பொியமேடை கார்த்திக், ராஜா, ஐயப்பன், சீனிவாசன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.செய்தியாளர் அ. ரவி

Comments
Post a Comment