தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியின் அந்தஸ்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி பெற்றுள்ளது. அதேசமயம்,35- ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாட்டில் மூன்றாவது மாநில. கட்சியாக அங்கீகாரம் பெற்றிருப்பதை முன்னிட்டும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்,எம்.பி. மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர், துரை.ரவிக்குமார் எம்.பி. ஆகியோர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றதை முன்னிட்டும், விசிக மேனாள் முதன்மை செயலாளர், கவிஞர், எழுத்தாளர்,பெண்ணியவாதி, தமிழ் தேசியவாதியுமான இவ்வளவு சிறப்புகளைப்பெற்ற உஞ்சைஅரசன், 68-வது பிறந்தநாள் நினைவேந்தல் ஆகிய முப்பெரும் நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்து, கொண்டாடும் விதமாக, தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை மறியலிலுள்ள அண்ணல் அம்பேத்கர் சிலை அருகே 6.6.2024 அன்றைய தினம் மாலை சுமார் 7 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய தஞ்சை மைய மாவட்ட செயலாளர்,கோ. ஜெய்சங்கர் தலைமைவகித்தார், சமூக நல்லிணக்க பேரவை மாநிலத் துணைச் செயலாளர், சிவா.தமிழ் நீதி, தஞ்சை மேனாள்மாநகர செயலாளர், தமிழ் முதல்வன், அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாவட்ட செயலாளர் முத்தமிழன், டாக்டர். பிரனேஷ் இன் பென்ட் ராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் யோகராஜ், போராளி பசுபதி, தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர்கள்: விளார்பாஸ்கர், குருங்குளம் முருகானந்தம் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் வேங்கை குணா.

Comments
Post a Comment