கயிலாஷ் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அரசு பொதுத்தேர்வில் பவானிநகரைச் சேர்ந்த அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கும் மலேசியாவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்ற ஏ.என். ஸ்ருதி, ஏ.என். கோகுல் ஆகியோருக்கு பாராட்டு - பரிசளிப்பு விழா, நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி கயிலாஷ் நினைவு அறக்கட்டளை நிறுவனர் பி.என்.கே கிருஷ்ணன் தலைமையில் பாடியநல்லூர் பவானி நகர் பவானி அம்மன் அன்னதான மண்டபத்தில் நடைபெற்றது.
பாடியநல்லூர் ஊராட்சி வார்டு உறுப்பினர் கே.ராஜவேலு, கயிலாஷ் அறக்கட்டளை உறுப்பினர்கள் எம்.லட்சுமிபதி, கே.விக்னேஷ், எம்.முருகன், பவிக்குமார், ஆர்.அசோக், ஜெ.பாஸ்கர், ஆர்.ஹிமயதமிழ்ச்செல்வன், பி.லுதர்சனன், கே.தனுஷ், எஸ்.பாலாஜி, ஆர்.சந்தோஷ், கே.அசோக், கிரி, தரணி, சதிஷ், ஆர்.கண்ணன், கே.ரமணன், வினோத், ஆர்.சர்வேஸ், ஏ.ஜீவானந்தம், எம்.தினேஷ்குமார், எம்.நவீன்குமார், வி.சுரேந்தர் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.
இயற்கைப் பாதுகாப்புக் குழு மாநிலத் தலைவர் இ.மாரியப்பன் முன்னிலை வகித்தார்.செங்குன்றம் ஸ்ரீதேவி பராசக்தி வீரம்மாகாளியம்மன் ஆலய தர்மகர்த்தா ஆர்.ராஜா சுவாமிகள், கிரீன் சேனல் மேலாளர் ஆர்.வசந்தராஜா, பாடியநல்லூர் ஊராட்சி வார்டு உறுப்பினர் ஏ.பிஸ்மில்லா, பவானிநகர் குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் எஸ்.ஜோசப், பொருளாளர் டெக்கரேட்டர் பி.சேகர், துணைச் செயலாளர் லயன் நண்பன் எம்.முகம்மது அபுபக்கர், கணக்குத் தணிக்கையாளர் ஏ.ஜோசப், கௌரவ தலைவர் எஸ்.ஏ. ஜோசப், கௌரவ ஆலோசகர் ஜான் அலோசியஸ், செயற்குழு உறுப்பினர்கள் எம்.ஏ. முத்துமீரான், ஐ.அந்துவான், ஜி.சரவணன், பிரான்ஸிஸ், ஏ.அருள், பேராசிரியர் சி.கே. லட்சுமண பெருமாள், பிஜேபி அழகிரி, எஸ்.ராஜேந்திரன், எஸ்.குமரேசன், பாமக டி.சந்துரு, எம்.ஏ. நகர் செல்வக்குமார், இரா.அழகர்சாமி, டி.ஆலயசாமி, அதிமுக சோழவரம் இலக்கிய அணிய ஒன்றிய செயலாளர் வி.ராஜா, வேலுசாமி, எஸ்.சூசை, லயன் கே.ஷண்முக சுந்தரம், லயன் கே.அன்பு, பவானி அம்மன் ஆலய தலைவர் கே.ரகு, பொருளாளர் எஸ்.ரமேஷ், மகளிர் குழு டி.மகேஸ்வரி, ஆர்.மீனா, ஆர்.தேவி. ஜி.தனலட்சுமி, மக்கள் மறுமலர்ச்சி மன்ற நிர்வாகிக கிச்சா (எ) ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் பாடியநல்லூர் எல்லப்பன், சமையல் மாஸ்டர் வி.எம்.கே. கேட்டரிங் உரிமையாளர் சி.திவாகர், வி.எம்.கே. சுரேஷ், முருகன், கே.அன்பு, ஜெ.செந்தில், செங்குன்றம், பவானிநகர், பெரியார் நகர் சுற்றுவட்டார பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment