தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகிற 21ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என கலெக்டா லட்சுமிபதி தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிரதி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை நடத்தப்படுகிறது. இந்த மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 21.06.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணி அளவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம். கோரம்பள்ளம். தூத்துக்குடியில் வைத்து நடைபெற உள்ளது.
இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலையளிப்போர்கள் மற்றும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தில் தங்களது விபரங்களை பதிவு செய்தல் வேண்டும். மேலும் வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான பல்வேறு தகவல்களை பெற THOOTHUKUDI EMPLOYMENT OFFICE என்ற Telegram Channel-ல் இணைந்து பயன்பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் அ. ரவி.

Comments
Post a Comment