தமிழ்நாடு ஓய்வுப்பெற்ற அரசு ஊழியர் சங்க, தஞ்சை தெற்கு மாவட்ட 15-வது பேரவை கூட்டம், தஞ்சை பெசன்ட் அரங்கில்,15.6.2024 அன்று காலை 10 மணியளவில், சங்க கொடியினை ஏற்றி வைத்த பின் நிகழ்ச்சியானது துவங்கியது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் ம. குமாரவேலு தலைமை தாங்கினார், மாவட்டத் துணைத் தலைவர்,ம. இராஜன் வரவேற்புரை வழங்கினார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர்,ரெ. சுரேஷ்குமார் துக்க உரையாற்றினார். மாவட்ட துணைத்தலைவர், இரா. கருணாநிதி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்,பின் ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் அமுதன் வேலை அறிக்கை வாசித்தார், மாவட்ட பொருளாளர் த. முத்துசேவு நிதி நிலை அறிக்கையினை சமர்பித்தார், அதன் பின்பாக விவாதமும், பதிலுரையும் நடத்தப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.மாவட்டத் துணைத் தலைவர்,ம. இராசரெத்தினம், மாவட்டத் துணைத் தலைவர்,ரெ. கருணாகரன், ' மாவட்ட இணைச் செயலாளர்,ந. குணசேகரன், மாவட்ட இணைச் செயலாளர் இரா. சத்தியசீலன் ஆகியோர்கள் கருத்துரை வழங்கினர், கிழக்கு வட்ட தலைவர்,க. மாரியப்பன், மேற்கு வட்ட பொருளாளர், ஆர்.இராமானுஜம், பூதலூர் வட்டச் செயலாளர்,வை. ஆறுமுகம், திருவையாறு வட்டச் செயலாளர்,பி. நாகராஜன் ஆகியோர் தீர்மானங்களை முன் மொழிந்தனர்.
இதன் தொடர்ச்சியாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. மாவட்ட கருவூல அலுவலர், கோ. கணேஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார், மாநில செயற்குழு உறுப்பினர்,ச. சோமலிங்கம் சிறப்புரையாற்றினர், கே. வி. நடராஜன் நிறைவுறையாற்றினார், நிகழ்ச்சியின் நிறைவாக மாவட்ட தணிக்கையாளர்,எம். கருப்புசாமி நன்றி உரையற்றனர்.15-வது பேரவை கூட்டத்தின் வாயிலாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களான: 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளித்தபடி அரசு ஊழியர், ஆசிரியர், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசிளித்து கோரிக்கைகளை ஏற்று உடனடியாக உரிய உத்தரவுகளை பிறப்பிக்குமாறு தமிழ்நாடு அரசை இம் மாவட்ட பேரவை வலியுறுத்துகிறது. 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையையொட்டி, 21-மாத நிலுவைத் தொகையினை விரைவில் வழங்கிடுமாறு தமிழ்நாடு அரசை இம்மாவட்ட பேரவை கேட்டுக்கொள்கிறது.
கம்யுடேஷன் பிடித்தம் செய்யும் காலத்தை 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாக குறைத்து ஆணையிட இம்மாவட்ட பேரவை தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தூய்மையான குடிநீர், தாய்மார்கள் பாலூட்டும் அறையும், அமைத்து தரவேண்டும் என தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையரை இப்பேரவை கேட்டுக் கொள்கிறது. உலக பாரம்பரிய சின்னமான தஞ்சை பெரிய கோயிலுக்கு வரும் பக்தர்கள் சாலையை கடக்க ஏற்படும் சிரமங்களை போக்கும் வகையில் மின் நகர்வு படிக்கட்டு அமைத்து உதவுமாறு இப்பேரவை கேட்டுக்கொள்கிறது. சத்துணவு ஊழியர்களுக்கு கால வரை ஊதியம், ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை ஆகியவற்றை அளிப்பதாக ஏற்கனவே பிப்ரவரி 2016-ல் முந்தைய அரசு சட்டமன்றத்தில் அறிவித்ததை அமல்படுத்த வேண்டும் என இப்பேரவை கேட்டுக் கொள்வதோடு, சத்துணவு உதவியாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஓய்வூதியம், 2000-ஐ,ரூ. 5000-ஆக உயர்த்தி வழங்கிட வேண்டுமெனவும் இம்மாவட்டப்பேரவை வலியுறுத்துகிறது. மாணவர்கள் பெற்றுள்ள கல்வி கடனை எந்த வித நிபந்தனையும் இன்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகளை இப்பேரவை கேட்டுக்கொள்கிறது. உள்ளிட்ட 21- தீர்மானங்கள் தமிழக அரசின் பார்வைக்கு கொண்டுச் செல்லப்படுகின்றது.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment