போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக ஆகன் கலைக்கூடம் சார்பில் சென்னை மாதவரம் அடுத்த மாத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சுமார் 50 மாணவர்கள் இடை விடாமல் சிலம்பம் சுற்றி ஐரோப்பியன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர். சுமார் 50 மாணவர்கள் 120 நிமிடம் சிலம்பம் சுற்றி இத்தகைய சாதனையை புரிந்தனர். ஆகன் சிலம்பம் கலைக்கூடம் துணைத்தலைவர் ஜாக்குலின் மேரி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஐரோப்பியன் உலக சாதனை புத்தகத்தின் இயக்குனர் சதாம் உசேன் கலந்து கொண்டு சாதனை புரிந்த மாணவர்களுக்கு சான்றிதழையும் கேடயங்களையும் வழங்கி கெளரவித்தார்.
இதில் கிரான்ட் மாஸ்டர் ஆப் சிஎஸ்கே நிறுவனர் முத்துக்குமார் தீபா மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.மேலும் இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில் சிலம்ப போட்டியை ஆசிய கோப்பையில் இணைக்க மத்திய அரசும், தமிழக அரசும் முயற்சி எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment