திருப்பூர் மாநகராட்சி தெற்கு ரோட்டரி மஹாலில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி.!
திருப்பூர் மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு.ந.தினேஷ்குமார் அவர்கள் மற்றும் ஆணையாளர் திரு.பவன்குமார் ஜி.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் தலைமையில் உயர்கல்வி ஆலோசகர் திரு.கலைமணி அவர்கள் முன்னிலையில் மாநகராட்சி சார்பில் இன்று (8.6.2023) தெற்கு ரோட்டரி மஹாலில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்கள்.
உடன் உதவி ஆணையாளர் (மண்டலம் 3&4) திரு. ஆர்.வினோத், பகுதி கழகச் செயலாளர் மியாமி அய்யப்பன் அவர்களும், வட்ட கழக செயலாளர்கள் கணேஷ், சண்முகசுந்தரம் அவர்களும்,தொழில்துறை பயிற்சி நிறுவன முதல்வர் திரு.பிரபு ITI, பாரதியார் பல்கலைக்கழக கல்வி ஆலோசகர் திரு.கௌதம், கல்விக்குழு தலைவர் மற்றும் 36 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு.திவாகரன்,43வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி சாந்தாமணி அவர்களும்,ஆனந்த், பூபதி அவர்களும் உட்பட பலர் உள்ளனர்.
செய்தியாளர் கோவிந்தராஜன்

Comments
Post a Comment