திருப்போரூர் பயர்டேக்வாண்டோ கிளப்பில், தற்காப்பு கலை பயிற்சியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மஞ்சள், பச்சை பட்டைகளை வழங்கிய MLA எஸ்.எஸ்.பாலாஜி
திருப்போரூர் பயர்டேக்வாண்டோ கிளப்பின் சார்பில் இதன் பொதுச்செயலாளாரும் , மாநில நடுவரும் , மாஸ்டருமான எட்வின் ஏற்பாட்டில் 01,02ஆண்டுகள் டேக்வாண்டோ தற்காப்புகலைபயிற்சியை நிறைவுசெய்த மாணவர்களுக்கு நிறைவுபயிற்சி வழங்கிய டேக்வாண்டோ அமைப்பின் செங்கல்பட்டு மாவட்ட பொதுச்செயலாளரும் , 4வதுகருப்புபட்டை மாஸ்டருமான தியாகராஜன் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மஞ்சள் , பச்சை பட்டைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்த திருப்போரூர் தொகுதியின் சட்ட மன்ற எஸ்.எஸ்.பாலாஜி.!
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றிய அளவில் தென்கொரிய நாட்டின் தொன்மைவாய்ந்த தற்காப்புகலைகளில் ஓன்றானதும் , இந்திய தமிழக அரசால் அங்கீகரிப்பட்ட கலையுமான டேக்வாண்டோ கலையின் கிளையானது திருப்போரூர் பயர்ஸ் டேக்வாண்டோ கிளப் என்ற பெயரில் இயங்கிவருகிறது. இதன் பொதுச்செயலாளராகவும் ,டேக்வாண்டோ போட்டியின் மாநில நடுவராகவும் 02வதுகருப்புபட்டை பெற்ற மாஸ்டர் எட்வின் என்பவர் செயலாளாற்றிவருகிறார். இவர் கொளத்தூர் , மானாமதி , காயார் , செம்பாக்கம் , குன்னப்பட்டு ,நாவலூர் , தண்டலம் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் இயங்கிவரும் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவமாணவிகளுக்கு குறிப்பாக மாணவிகளுக்கு அரசின் உதவியுடன் டேக்வாண்டோ பயிற்சியளித்துவருகிறார். வாராவாராம் அந்தந்த பள்ளிகளுக்கே நேரிடையாக சென்று பொறுமையாக மாணவர்களுக்கு புரியும்வகையில் அவர்களுக்கு ஏற்றவாறு எளியமுறையில் கற்றுதந்துவருகிறார், மேலும் தனது சொந்தசெலவில் அனைத்து மாணவர்களுக்கும் தற்காப்பு சீருடையை இலவசமாக வழங்கியுள்ளார். இவரிடம் தொடர்ந்து ஓர்ஆண்டு மற்றும் இரண்டுபயிற்சி பெற்ற மாணவர்களும் அடுத்தகட்டத்திற்கு செல்ல திருப்போரூர் பேரூராட்சியில் காலவாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கான கலர் பெல்ட் கிரேடிங் என்னும் பயிற்சி நிறைவு வகுப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தினார். இப்பயிற்சி வகுப்பினை மாஸ்டர்எட்வினின் அவரது மாஸ்டரும் , செங்கல்பட்டு மாவட்ட டேக்வாண்டோ அமைப்பின் மாவட்ட பொதுச்செயலாளரும் 04வதுகருப்பைபட்டை பெற்றமாஸ்டருமான தியாகராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு இறுதிபயிற்சி வகுப்பை நடத்தினார். இதனைத்தொடர்ந்து தேர்வு பெற்ற மாணவர்களுக்கான பச்சைமற்றும் மஞ்சள்பட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் திருப்போரூர் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, திருப்போரூர் பேரூராட்சி மன்ற தலைவர் மு.தேவராஜ் , ஜனதாகட்சி மாநிலப்பொதுச்செயலாளர் செங்கைஆனந்தன் ,திருப்போரூர் மூர்த்தி கிளினிக் நிறுவனர் மற்றும் மருத்துவர் ராஜா , பேரூராட்சி முன்னாள் கவன்சிலர் குமரன் ,இன்னாள் 03வதுவார்டு கவுன்சிலர் சிபிசக்ரவர்த்தி , குன்னப்பட்டு , காயார் ,மானாமதி அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்தகொண்டனர்கள். இவர்களுக்கு மாஸ்டர் எட்வின் சால்வையணிவித்து வரவேற்றார். இதனைத்தொடர்ந்து அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் தாங்கள் பயிற்சி பெற்றுவரும் டேக்வாண்டோ கலையை செய்துகாட்டினார்கள் .
இதனைத்தொடர்ந்து சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி ,தலைவர் தேவராஜ் உள்ளிட்ட சிறப்பு அழைப்பாளர்கள் தேர்ச்சிப்பெற்ற மாணவர்களுக்கு பச்சைப்பட்டை , மஞ்சள்பட்டைகளை வழங்கிவாழ்த்து தெரிவித்து வாழ்த்துரை வழங்கினார்கள் .இதில் சுமார் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் இவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்கள். இப்பயிற்சிவகுப்பினை டேக்வாண்டோவின் பயிற்சியாளர்களான லிகர்ஓலிம்பிக் டேக்வாண்டோ வேலாயுதம் ,மகேஷ் ,
ஓஎம்ஆர் யூல்ப்டேக்வாண்டோ வெற்றிமாறன் , பவர் டேக்வாண்டோ ராசாமி ,வின்னர்டேக்வாண்டோ, உமாசந்தர் ஆகியோர்கள் மாணவர்களை ஒருங்கிணைத்தனர்கள் .இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருப்போரூர் பயர்டேக்வாண்டோ கிளப்பின் பொதுச்செயலாளரும் , டேக்வாண்டோவின் மாநில நடுவரும் 02வதுகருப்பு பட்டை பெற்ற மாஸ்டருமான எட்வின் செய்திருந்தார் .
இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்து கலந்துகொண்ட அனைவருக்கும் இவரது மனைவியும்காயார் தலைமை ஆசிரியையுமான தேன்மொழி நன்றி தெரிவித்தார் .செங்கல்பட்டுமாவட்ட அளவிலேயே முதன்முறையாக திருப்போரூரில் மட்டும் தான் இம்மாதிரியான பயிற்சிவகுப்புகள் முதன்முறையாக நடைப்பெற்றுள்ளதாக திருப்போரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி கூறி பாராட்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும் .
மேலும் பயிற்சிவகுப்பு நிகழ்ச்சியில் இறுதியில் தென்கொரியாவில் உள்ள டேக்வாண்டோ தற்காப்பு கலையின் தலைமையகத்திலிருந்து மாஸ்டர் எட்வினுக்கு வழங்கப்பட்ட 02ம்நிலை கருப்பு பட்டை அங்கீகாரசான்றிதழை மாஸ்டர் தியாகராஜன் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர்கள் இணைந்து மாஸ்டர் எட்வினுக்கு அனைவரது முன்னிலையிலும் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்கள்.இதனைத்தொடர்ந்து மாஸ்டர் எட்வின் தான் கற்ற சிலகலைகளை அனைவரது முன்னிலையிலும் செய்து காட்டி அசத்தினார்.
செய்தியாளர் மூர்த்தி

Comments
Post a Comment